ஜனாதிபதி சிங்கப்பூர் செல்ல உள்ளதாகவும், அதன் பின்னர் அவர் தனது இராஜினாமா கடிதத்தை கையளிப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு காரணங்களால் ஜனாதிபதியால் விமானத்தில் ஏற முடியவில்லை எனவும், சிங்கப்பூர் செல்வதற்காக தனியார் விமானம் ஒன்றுக்காக ஜனாதிபதி காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Month: July 2022
ஜனாதிபதியாக பதவியேற்க பொன்சேகா தயார்
பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மை தெரிவு செய்தால் ஜனாதிபதி பதவியை ஏற்கத் தான் தயார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு குழுவினரும் அவருக்கு ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய இடங்களை கைவிட தீர்மானம்
காலி முகத்திடல் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் என்பவற்றை உரிய தரப்பினரிடம் கையளிக்க காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு நடைபெற்று வரும் ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜினாமா கடிதம் குறித்து வெளியான புதிய அறிவிப்பு
சிங்கப்பூர் சென்றதும் இராஜினாமா?
புதிய பிரதமரை நியமிக்குமாறு ரணில் கோரிக்கை
சர்வக்கட்சி அரசாங்கத்தின் கீழ் புதிய பிரதமராக அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிக்கு இணக்கமான ஒருவரை நியமிக்குமாறு சபாநாயகரிடம் பதில் ஜனாதிபதியான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிவிசேட வர்த்தமானி வெளியானது
ஜனாதிபதியின் அதிகாரங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கும் வகையில் அதி விசேட வர்த்மானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலாகும் வகையில் குறித்த வர்த்தமானி ஊடாக, ஜனாதிபதியின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உத்தியோகப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளன.
’தமிழ் மக்களின் பிரச்சினைக்கும் தீர்வு வேண்டும்’
ஏமாற்றினார் மஹிந்த யாப்பா அபேவர்தன
ரணிலின் பதவிப் பேராசைக்காக நாட்டை பலிகொடுக்க வேண்டாம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்கிற தனிமனிதரின் பதவிப் பேராசைக்காக நாட்டையும், நாட்டு மக்களையும் பலிகொடுக்க வேண்டாமென தெரிவிக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்த அரசாங்கம் முயல்வதாகவும் தெரிவித்தார்.