மாலைத்தீவுக்கு தப்பியோடிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அங்கிருந்து சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அபுதாபி நோக்கி பயணிப்பதற்காக மாலைத்தீவில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ஸ சிங்கப்பூர் ஊடாக அபுதாபி நோக்கி பயணமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Month: July 2022
பிரதமர் அலுவலகமும் போராட்டக்காரர்கள் வசம்
ப்ளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர். கடந்த 9ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை என்பன போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டிருந்தன. இந்நிலையில், தற்போது பிரதமர் அலுவலகத்துக்குள்ளும் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.
என்னதான் நடக்கப் போகுது…..? என்னதான் நடக்க வேண்டும்…..?
புதிய ஜனாதிபதி தெரிவுக்கு : 20 ஆம் திகதி வாக்கெடுப்பு
புதிய ஜனாதிபதியை தெரிவுச் செய்வதற்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 15 ஆம் திகதியன்று பொறுப்பேற்கப்படும். ஜூலை 20ஆம் திகதியன்று வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியை தடுக்க எம்மால் முடியாது
கட்சி தலைவர்களுடன் போராட்டக்காரர்கள் சந்திப்பு
காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினருக்கும் கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினரை அங்கத்துவப்படுத்தி 25 பேர் பங்கேற்கவுள்ளனர். பாராளுமன்ற கட்டத்தொகுதியில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பின் போது, எதிர்கால அரசியல் நடவடிக்கை தொடர்பிலான கருத்துக்கள் மற்றும் யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளன.
இராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்ட ஜனாதிபதி
சவேந்திர சில்வாவின் கோரிக்கை
நாட்டில் அமைதி பேணப்படுவதை உறுதி செய்வதற்கு அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பு தரப்பினருக்கு ஆதரவளிக்குமாறு பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று (09) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலக கோரி நேற்று (09) கொழும்பில் மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையிலேயே சவேந்திர சில்வா மக்களிடம் இவ்வாறு விடுத்துள்ளார்.
இலங்கையை உன்னிப்பாக அவதானிக்கும் பிரித்தானியா
இலங்கையில் இடம்பெற்று வரும் சம்பவங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் மற்றும் அந்நாட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தாரிக் அஹமட் ஆகியோர் இதனை தெரிவித்துள்ளனர். உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவுகளினூடாக அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.
கூட்டம் கூட்டமாக சீனாவை விட்டு வெளியேறும் வெளிநாட்டினர்
பீஜிங்கின் கடுமையான பூச்சிய கொவிட் கொள்கைகள் காரணமாக, சீனாவில் இருந்து பல வெளிநாட்டவர்கள் வெளியேறிவருகின்றனர். இந்தக் கொள்கையானது, மக்களை வாரக் கணக்கில் வீட்டுக்கு உள்ளேயே இருக்க கட்டாயப்படுத்துவதால், விநியோகச் சங்கிலி சிக்கல்கள் முதல் பன்னாட்டு நிறுவன மூடல்கள் வரை இடம்பெற்று வருகின்றன.