வெடி கொளுத்திய கல்முனை வர்த்தகர்கள்

அம்பாறை  – கல்முனை பிரதான வீதியில் இன்று பட்டாசு வெடிக்க வைத்து, போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில், இவ்வாறு பட்டாசு கொழுத்தப்பட்டது. இந்த போராட்டத்தினை கல்முனை  சேர்ந்த இளம் வர்த்தகர்கள்  இணைந்து முன்னெடுத்ததுடன், ஜனாதிபதி கோட்டபாய உடனடியாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

யாழில் மாபெரும் சைக்கிள் பேரணி

ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகக் கோரி யாழில் சைக்கிள் பேரணி ஒன்று யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து யாழ். நகர் நோக்கி இன்று காலை 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. யாழ். மாவட்ட வெகுஜன அமைப்புகள், தொழிற்சங்கங்கள், அரசியற் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டது.  குறித்த பேரணி யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக சென்று , அங்கு கூடி கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

அலரிமாளிகையும் முற்றுகை

கொள்ளுப்பிட்டியவில் உள்ள பிரதமர் வாசஸ்தலமான அலரி மாளிகையும் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

https://dailymirror-video-out.s3.amazonaws.com/thumb_39b27b8ec9.jpg

கொழும்பில் ஒரு ரவுட் அப்

  • ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் எதிரான கோஷங்களை எழுப்பிக்கொண்டு மக்கள் சாரை சாரையாக காலி முகத்திடலை நோக்கி படையெடுக்கின்றனர்.
  • பெரும்பாலானவர்கள் தேசிய கொடியை ஏந்தியிருக்கின்றனர்.
  • நந்த​சேன என்று ஏழுதப்பட்டிருக்கும் பதாகைளையும் தாங்கி நின்றிகின்றனர்.
  • “கோட்டா வீட்டுக்குப் போ” எனும் கோஷங்கள் காதை கிழித்துச் செல்கின்றன.
  • கோட்டை, பொலிஸ் தலைமையகம், ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட பிரதேசங்களில் இரும்புக் கம்பிக்களைக் கொண்டு வேலிகள் பின்னப்பட்டுள்ளன.
  • நீர்​கொழும்பு- கொழும்பு வீதியில் ஓர் ஒழுங்கை மூடப்பட்டுள்ளது. பெரும் திரளான ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பை நோக்கி படையெடுத்து வருகுன்றனர்.
  • மொரட்டுவை பகுதியிலிருந்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வருகைதருகின்றனர்.
  • கொழும்பில் பல பகுதிகளிலும் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
  • பேரா​தனைப் பல்கலைகழகத்தில் இருந்தும் மாணவர்கள் பஸ்களில் வருகின்றனர்.
  • சைக்கிள்களின் ஓட்டம் அதிகரித்துள்ளது.
  • பொலிஸ் வானங்களின் ரோந்து அதிகரித்துள்ளது.
  • லொறிகளுக்குள் போராட்டக்காரர்கள் ஏற்றி வரப்படுகின்றனர்.
  • பொதுப் போக்குவரத்துச் சேவைகள் முற்றாக ஸ்தம்பிதம். எனினும், தனியார் பஸ்கள் இரண்டொன்று சேவையில் ஈடுபட்டுள்ளன.
  • அதிர்ஷ்ட இலாபச் சீட்டு கூடாரங்கள் திறந்துள்ளன.
  • பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
  • பெட்டிக்கடைகள் திறந்துள்ளன.
  • மருந்தகங்கள் திறந்துவைக்கப்பட்டுள்ளன
  • மதுபானசாலைகளும் திறந்துள்ளமையை அவதானிக்க முடிந்தது
  • நிர்மாணத்துறையில் பணியாற்றுபவர்கள் தங்களுடைய க​டமைகளைச் செய்கின்றனர்.
  • பட்டா ரக வாகனங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்றிவரப்படுகின்றனர்.
  • போக்குவரத்துப் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
  • முக்கிய இடங்களில் ஆயுதம் தரித்த ​​​​இராணுவத்தினர் கடமையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
  • கடற்படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
  • போராட்டக்களத்துக்கு பெருந்திரளானோர் நடந்தே வந்துகொண்டிருக்கின்றனர்.
  • எரிபொருள் நிரப்பும் நிலையங்களில்  வரிசைகள் குறைந்துள்ளன. சில இடங்களில் எரிபொருள் வரிசைகளே இல்லை

கோட்டாவை நீச்சல் தடாகத்தில் தேடும் ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், அங்கு ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஷவை தேடியலைந்தனர். அவர் எங்குமே கிடைக்கவில்லை. இதனையடுத்து, அங்கிருந்த நீச்சல் தடாகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் நீச்சல் அடித்துள்ளனர்.  

ரணிலின் அழைப்பை நிராகரித்தார் சஜித்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்புக்கமைய இன்று மாலை 4 மணியளவில் அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டவுள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறவித்திருந்தார். இந்நிலையில், அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். எந்தவொரு சட்டபூர்வமான தன்மையும் இல்லாது பதவி வகிக்கும் பிரதமரின் கூட்டத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி செல்லாது என்றும் சஜித் அறிவித்துள்ளார்.

கோட்டா அவுட் ஆனார்?

மக்கள் எதிர்ப்பு காரணமாக கோட்டாபய ராஜபக்ஸ, ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

70 ஆண்டுகளில் இல்லாத வறட்சி; 5 பிராந்தியங்களில் அவசர நிலை பிரகடனம்

இத்தாலியில் மழையின்மை மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக ஐந்து பிராந்தியங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது.
ரோம், இத்தாலியில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக மோசமான வறட்சி நிலையை அந்த நாடு எதிர்கொண்டுள்ளது.

பதவி விலகுகிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து இன்று இராஜிநாமா செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஆனால், அவர் பிரதமராக இன்னும் சில மாதங்களுக்கு தொடர்வார் என்றும் தெரிகிறது. கன்சர்வேடிவ் கட்சித் தலைமைக்கான தேர்தல் விரைவில் நடைபெறும். அக்டோபரில் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டுக்கு முன்னதாக புதிய பிரதமர் பதவிக்கு வருவார். போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அண்மையில் பதவி விலகினர். இந்நிலையில், போரிஸ் ஜான்சன் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளார்.

துவிச்சக்கர வண்டி பாவனைக்கு தனி ஒழுங்கை

துவிச்சக்கர வண்டிகளின் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடுக்கு மாற்றீடாக மக்கள் துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்துகின்றனர். இதனால், கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்துபவர்களுக்காக தனியான ஒழுங்கைகளை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்ட செயற்பாடாக ஆமர் வீதி, ஹெட்டியாவத்தை ஊடாக கொழும்பு துறைமுக நுழைவாயில் வரையான மருங்கை துவிச்சக்கரவண்டி பயன்பாட்டிற்காக அடுத்த வாரம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.