காலிமுகத்திடல் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்கள் மீது படையினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை தாம் வன்மையாக கண்டிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Month: July 2022
அமைச்சரவை பதவிப்பிரமாணம்
சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் அந்தரத்தில் தொங்கிய மக்கள்
முக்கியப் பிரிவுகளில் தேசிய விருது – ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்தின் சிறப்பு என்ன?
புதிய பிரதமராக தினேஷ் சத்தியப்பிரமாணம்
புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
கோட்டா கோ கம மீது இரவில் தாக்குதல்; கொழும்பில் பதற்றம்
அரசியல் தந்திரசாலி ரணிலின் வெற்றி!
(புருஜோத்தமன் தங்கமயில்)
நம்பிக்கைக் கதைகளின் புதிய அத்தியாயமாக இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடம்பிடித்திருக்கிறார். ஐந்து தசாப்த கால அரசியல் வாழ்வைக் கொண்டிருக்கின்ற ரணில், ஜனாதிபதிக் கனவை ஒவ்வொரு நாளும் கொண்டு சுமந்தார். இரண்டு தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் நேரடியாக போட்டியிட்டு தோல்வியடைந்த போதிலும், அவர் தனது கனவை அடைவதற்கான அனைத்துச் சந்தர்ப்பங்களையும் பரீட்சித்துப் பார்ப்பதற்கு தயாராக இருந்தார். அதுதான், அவரை காலம் இன்று ஜனாதிபதியாக்கியிருக்கிறது. நம்பிக்கைக் கதைகளில் புதிய நாயகனாகவும் மாற்றியிருக்கின்றது.
ரணில் ஜனாதிபதியாக காரணமானவர்களை அம்பலப்படுத்தினர் விமல்
ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை சுற்றிவளைக்கப்பட்டதன் பின்னரும் அதற்கு முன்னர் ஜனாதிபதி இராஜினாமா செய்யவேண்டுமென நாங்கள் கூறவில்லை ஏன்? எனக் கேள்வியெழுப்பிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்ச, அந்தப் பதவியில் இருப்பவர் அப்படியே விலகிவிட்டால். அதனைவிடவும் மோசமானவரைக் கொண்டு அப்பதவியை நிரப்பமுடியும் என்பதனால் ஆகும் என்றார்.
போராட்டக்காரர்களின் நாளைய திட்டம்
கொழும்பு காலி முகத்திடலில் உள்ள முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் உருவச் சிலை அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீற்றர் தூரத்துக்கு உள்நுழைய தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (20) உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்தத் தீர்ப்பைத் திரும்பிப் பெற வேண்டுமென கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் நாளை (21) கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட உள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி நுவான் போபகே தெரிவித்தார்.