அரச கட்டடங்களை ஆக்கிரமிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்ற போர்வையில் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பது சட்டவிரோதமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனவே, இவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராம விகாரையில் நேற்று (20) வழிபாட்டில் கலந்து கொண்ட பின்னர் அவர் இதனை தெரிவித்தார்.

மறுத்தது இந்தியா

இலங்கை ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இலங்கை பாராளுமன்றத்தில் நடைபெறும் வாக்களிப்பு தொடர்பாக இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்கள் மீது செல்வாக்கு செலுத்தும் நோக்குடன் இந்தியாவிலிருந்து அரசியல் ரீதியான அழுத்தம் வழங்கப்பட்டதாக ஆதாரமற்றதும் ஊகங்களின் அடிப்படையிலும் வெளியாகியிருக்கும் ஊடக அறிக்கைகள் தொடர்பாக நாம் அறிந்துள்ளோம் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

ரணிலின் வெற்றி எப்படி சாத்தியமானது?

பாராளுமன்றில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று, இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகினார்.

வெளிநாடு செல்பவர்களுக்கு விசேட பஸ் சேவை

மன்னார் மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கும், வெளிநாடுகளில் இருந்து கொழும்பு ஊடாக மன்னாருக்கு வருகின்றவர்களுக்குமான விசேட போக்குவரத்துச் சேவையை மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் ஏற்பாடு செய்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் வெற்றி

இலங்கையின் இடைக்கால ஜனாதிபதியைத் தெரிவுச் செய்வதற்காக, நடத்தப்பட்ட வாக்கெடுப்பு இன்று (20) பாராளுமன்றத்தில் நடைபெற்று நிறைவடைந்தது. அதில் அதிகபட்சமாக 142 வாக்குகளை பெற்று ரணில் விக்கிரமசிங்க வெற்றிப்பெற்றுள்ளார்.

திடீரென வாகனத்திலிருந்து இறங்கிய ரணில்

பாராளுமன்றத்தில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த இராணுவம் மற்றும் பொலிஸாரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்துள்ளார்.ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்திலிருந்து தனது வாகனத்தில் புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  திடீரென தனது வாகனத்திலிருந்து இறங்கி அங்கிருந்த பாதுகாப்புத் தரப்பினருடன் கலந்துரையாடினார்.

நாளை என்ன நடக்கும்…. நடக்க வேண்டும்…

(சாகரன்)

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று நம்பப்பட்ட எதிர்பார்க்கப்பட்ட இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றும் செயற்பாட்டிற்குள் தன்னை இறுக்கமாக பிணைத்துக் கொண்டுள்ளது.

இன்றும் (19) நாளையும் (20) பாராளுமன்றத்தில் நடைபெறப்போவது என்ன?

இந்நாட்டின் பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியைத் தெரிவு செய்வது தொடர்பில் இதற்கு முன்னர் ஒருமுறை அனுபவம் இருக்கின்றபோதும் இம்முறை இது விசேடமாகக் காணப்படுகிறது. இதற்கு முன்னர் 1993ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாச மறைந்ததைத் தொடர்ந்து அப்போதைய பதில் ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க, பிரேமதாசவின் எஞ்சிய காலத்துக்காக வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். ஆனால் இம்முறை வேட்பாளர்கள் சிலர் போட்டியிட இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டிருப்பதால் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியிருக்கும். அப்படியாயின் அது எமது நாட்டின் வரலாற்றில் புதிய அனுபவமாக இருக்கும்.

மூவரும் டளஸூக்கு ஆதரவு

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்களான மூவ​ர், இடைக்கால ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் டளஸ் அழகபெருமவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரே இவ்வாறு தீர்மானித்துள்ளனர். இதுதொடர்பில், இன்று (19) நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.

ஜனாதிபதி பதவிக்கு மூவர் போட்டி

இலங்கையில் வெற்றிடமாகியுள்ள அடுத்த ஜனாதிபதி பதவிக்கு மூவர் போட்டியிடுவதுடன், அவர்களில் பெயர்கள் உத்தியோகபூர்வமாக பாராளுமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, நாளை அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ரகசிய வாக்கெடுப்பு நடக்கவுள்ளது.