அடுத்த ஜனாதிபதி எப்படி தெரிவு செய்யப்படுவார்?

(என்.கே. அஷோக்பரன்)

அரசியலமைப்பின் 38(1)(ஆ) சரத்தின் பிரகாரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்ததன்படி, இலங்கையின் ஜனாதிபதி பதவி வெற்றிடமானது. இதனைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் 40(1)(இ) சரத்தின் படி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்பின் படி, கோட்டாபய விட்டுச்சென்றுள்ள மிகுதிப் பதவிக்காலத்திற்காக அடுத்த ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் வரை, பதில் ஜனாதிபதியாகியுள்ளார்.

போராட்டக்காரர்கள் – சஜித் சந்தித்து பேச்சு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகள் இன்று(18) பேச்சுவார்த்தை நடத்தினர். புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் மற்றும் முன்னோக்கி செல்லும் வழி குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கலந்துரையாடியுள்ளனர். இதன்போது,  போராட்டக்காரர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்

முச்சக்கரவண்டி கட்டணம் குறைப்பு

எரிபொருள் விலை குறைப்புடன் இரண்டாவது கிலோமீட்டருக்கு அறவிடப்படும் கட்டணம் 100 ரூபாயிலிருந்து 90 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முதல் கிலோமீட்டருக்கு தற்போதுள்ள 100 ரூபாய் கட்டணத்தை எந்த வகையிலும் மாற்ற முடியாது என அதன் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.

ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளோம்

நாடு எதிர்நோக்கும் நெருக்கடிக்கு பொதுவான ஒருமித்த கருத்துடன் தீர்வு காண்பதே புதிய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் முதல் பொறுப்பாக இருக்க வேண்டும் என நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவர்  கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

ஒருவர் வாபஸ் பெறும் சாத்தியம்

புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு, புதன்கிழமையும் (20), வேட்புமனுத்தாக்கல் நாளையும் (19) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

அனைத்து பள்ளிகளும் நாளை முதல் இயங்கும் ; புதிய அறிவிப்பு

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் நான்கு நாட்களாக போராட்டம் நடைபெற்றது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் நான்காவது நாள் போராட்டத்தில், அந்த தனியார் பள்ளியில் வன்முறை ஏற்பட்டது. இதில் பள்ளி முழுமையாக சூறையாடப்பட்டது.

அவசரகால சட்டத்தை அமல்ப்படுத்தினார் ரணில்

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நாடு முழுவதும் இன்று முதல் (18) அவசரகால சட்டம் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நாடு முழுவதும் அவசரகால சட்டம் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளை தீவிர போரட்டம்

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாளை தீவிர போரட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். இதன்படி, அண்மைய நகரங்களில் போராட்டங்களை முன்னெடுக்குமாறு அவர் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியா: இலங்கை விவகாரம்.. 19 இல் சர்வகட்சி கூட்டம்

இலங்கையில் நிலவி வரும் நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19) மாலை சர்வ கட்சிக் கூட்டம் நடைபெறும் என பாராளுமன்ற விவகார அமைச்சர் பிரலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.