ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள வாக்கெடுப்பில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க போட்டியிடவுள்ளார் எனவும் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் ஜேவிபியின் எம்.பியான விஜித ஹேரத் அறிவித்துள்ளார். பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் போட்டியிடவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையிலேயே அனுரகுமாரவின் அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
Month: July 2022
இந்தியாவுக்கு வாடகைக் கப்பல்களை அனுப்பும் ரஷ்ய நிறுவனங்கள்
முட்டுச்சந்தியில் முனகும் தேசம்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
மக்கள் போராட்டங்களின் வீரியம் என்னவென்பதை இலங்கையர்களும் குறிப்பாக அரசியல்வாதிகளும் உணர்ந்த தருணம் மகத்தானது. ஆனால் இலங்கை அரசியலில் பேரிடர்கள் வரிசைகட்டி நிற்கின்றன. எதிர்கட்சித் தலைவர் ஒருபேரிடர் என்றால் சபாநாயகர் இன்னொரு பேரிடர். எதிர்கட்சிகளும் பாராளுமன்றும் இதன் தொடர்ச்சி. இந்தப் பின்னணியிலேயே இந்நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழிகளை மக்கள் தேடவேண்டியிருக்கிறது.
ரணில் விக்கிரமசிங்க – ‘ஆசனம்’ இல்லாமலே சிம்மாசனம் ஏறினார்
இனி இலங்கை முன்னோக்கிச் செல்லும்
“கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகி விட்டார். இனி இலங்கை முன்னோக்கிச் செல்லும் என எதிர்பார்க்கிறேன்” என மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத் தெரிவித்துள்ளார். மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூருக்கு கோட்டாபய புறப்பட்ட சில மணி நேரத்தில், தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனைப் பதிவிட்டுள்ளார்.
இராஜினாமா கடிதத்தை அனுப்பிய ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார். கடிதம் கிடைத்ததை சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ளதுடன், அதன் சட்டபூர்வ தன்மை கூறித்து ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதன்பின்னர் நாளைய தினம் ஜனாதிபதியின் இராஜினாமா உத்தியோகப்பூர்வமான அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனஅழுத்தத்தில் கோட்டா
சபையை நாளைக்கு கூட்டுவதில் சிக்கல்
பாராளுமன்றத்தை நாளை (15) ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேடமாக் கூட்டுவதில் சிக்கலான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றக் கூட்டத்தொடரின் அடுத்த அமர்வு, எதிர்வரும் 19ஆம் திகதியே கூடவேண்டும். எனினும், கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய நாளை (15) அவசரமாகக் கூட்டத் தீர்மானிக்கப்பட்டது. எனினும், அவ்வாறு சபையைக் கூட்டவேண்டுமாயின் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவேண்டும். அதுவும் 24 மணிநேரத்துக்கு வெளியிடவேண்டுமெனவும் அறியமுடிகின்றது. இந்நிலையில், நாளை (15) கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று காலை நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டா ஏன் சிங்கப்பூருக்கு சென்றார்?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏன் சிங்கப்பூருக்குச் சென்றுள்ளார் என்பது தொடர்பில் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது, கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாகப் பதவியேற்ற நாள் முதல் மருத்துவ சிகிக்கைகளுக்காக அடிக்கடி சிங்கப்பூர் சென்று வந்துள்ளனர்.
மீண்டும் ஊரடங்கு
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுகின்றது. இன்று (14) நண்பகல் 12 மணி முதல் நாளை (15) அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக, வர்த்தமானி வெளியாகியுள்ளது.