திருகோணமலை மூதுார் சேனையூரில் பேராசிரியர் பாலசுகுமாரனின் மகள் அனாமிகா நினைவாக அமைக்கபட்ட ”அனாமிகா களரி பண்பாட்டு அமையத்தின்” திறப்பு விழா 6 ஆம் திகதி இடம் பெற்றது. இந்நிகழ்வுக்கு தென்னிந்திய திரைப்பட நடிகர் நாசர் அதிதியாக கலந்து கொண்டார்.
Month: August 2022
அதிரடியாக திருத்தியது அரசாங்கம்
மக்கள் போராட்டத்தின் வெற்றிக்காக கைகோர்ப்போம்
காலிமுகத்திடல்போராட்டக்காரர்களின்விசேடஅறிக்கை
உங்கள் மீதும், இந்த சமூகத்தின் மீதும் கொண்ட எல்லையற்ற அன்பினால் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் ஆகிய நாம் உங்களுக்கு இவ்வாறு எடுத்துரைகின்றோம். இந்த தீவை சிக்கலுக்குள் தள்ளிவிட்ட, கொடுங்கோல் ஆட்சி செய்த ஜனாதிபதி ஒருவரை இந்து சமுத்திரத்திற்கு அப்பால் விரட்டியடித்து அதிகாரவெறி பிடித்த குடும்ப ஆட்சியின் தந்தத்தை உடைத்து மண்டியிட வைத்த மக்கள் போராட்டத்தின் முதற்கட்டம் ஜூலை 9 ஆம் திகதி நிறைவேறியது.
அது இலங்கையின் வரலாற்றை சரியான முறையில் வாசிக்கும் எந்த ஒருவருக்கும் தவிர்க்க முடியாத மக்களின் வெற்றியாகும். அந்தப் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த, தமது சொத்துக்களைத் தியாகம் செய்த, சிறைவாசம் அனுபவித்த, ரத்தம் சிந்திய, வியர்வை சிந்திய எல்லா போராட்டக்காரர்களையும் முதற்கண் நினைவு கூருகிறோம்.
எனினும் அதிகார வர்க்கத்தினரின் மக்களுக்குத் துரோகம் இழைக்கும், சூழ்ச்சிகளைப் புரிந்து அரசியல் செய்யும் அந்த கட்டமைப்பு முற்றிலுமாக இன்னும் அகற்றப்படவில்லை. நான்கு கால்களும் உடைபட்டு நிலத்தில் விழுந்த இந்த அதிகாரவர்க்கம், யாப்பின்பிரிவு, உபபிரிவு மற்றும் சரத்துக்கள் மூலம் நுழைந்து கொண்டு பொதுமக்களின் அபிப்பிராயத்திற்கு எதிராக பாராளுமன்ற அபிப்பிராயத்தை பயன்படுத்தி கடுமையான அதிகாரத்துடன் மோசமான கூட்டமைப்பின் ஊடாக, நொண்டியடிக்கும் அதிகார கட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.
முதற்கட்டமான மக்கள் வெற்றியை மக்கள் அனுபவிப்பதற்கு முன்னரே இரண்டாம் கட்ட மக்கள் போராட்டத்திற்கு செல்வதற்கான நிலையை அது ஏற்படுத்தி இருக்கின்றது.
அப்போதிருந்தே இந்த போராட்டத்தை முடக்க மிகவும் மோசமான நடவடிக்கைகளையும் அது மேற்கொண்டுள்ளது.
சட்டரீதியான கைதுகள் தான்தோன்றித்தனமான கடத்தல்கள் தாக்குதல்கள் அநீதியான முறையில் சிறைப்படுத்தல்கள் என்பவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் அரசினால் ஆரம்பிக்கப்பட்ட ஒடுக்குமுறைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
மக்கள் விருப்பத்திற்கு மாறாக உருவாக்கிக் கொள்ளப்பட்ட ஜனாதிபதி, தோல்வியடைந்த ஒரு அரசியல் குடும்பம் மற்றும் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட அரசியல்வாதிகள் ஒன்றுசேர்ந்து கொண்டு இந்தப் பொருளாதாரச் சிக்கலால் மிகவும் கஷ்டப்படும் மக்களுக்கான தீர்வை வழங்காமல், போராட்டக்காரர்களை அடக்குவதற்காக முனைகின்றனர்.
இந்த மோசமாக அநீதியான செயற்பாடுகள் என்பன, வெட்கமற்ற அரசியல் செயற்பாடுகள் என்பதை நாம் புதிதாகக் கூறவேண்டிய அவசியமில்லை.
அன்பார்ந்த இலங்கைமக்களே!
நாம் இவர்களால் செய்யப்படும் இந்த முறைகேடுகளுக்கு பயந்தவர்கள்அல்ல.
சுதந்திரமான மக்கள் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மிலேச்சத்தனமாக சமூகமக்களின் நல்வாழ்வை இந்தநாடு ஏற்படுத்திக் கொள்ளுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் ஒரு வீதம் கூட இந்த அடக்கு முறையாளர்களால் பின்னோக்கி செல்ல போவதில்லை என்பதையும் மிக உயரிய நம்பிக்கையுடனும், ஆழ்ந்த திடசங்கற்பத்துடனும் உங்கள் முன் வைக்கின்றோம்.
அத்துடன் மிகவும் அமைதியான முறையில் போராட்டம் புரிந்த போராட்டக்காரர்களை வன்முறை புரிந்தவர்களாக பிழையான விதத்தில் மக்கள் முன் அடையாளம் காட்டி, தேர்ந்தெடுத்த சில போராட்டக்காரர்களை பயங்கரவாத முத்திரைகுத்தி அரசின் அடக்கு முறைகளை செயற்படுத்த முயற்சிக்கும் சூழ்ச்சிமிக்க சதித்திட்டத்தை விளங்கிக்கொள்ளுமாறும், அதைமுறியடிக்க அன்றும் இன்றும் என்றும் ஆயுதமற்ற வன்முறையற்ற போராட்டக்காரர்களுடன் கைகோர்க்குமாறு உங்களுக்கு போராட்டக்காரர்களாகிய ஆகிய நாம் அழைப்புவிடுக்கின்றோம்.
அன்பார்ந்தஇலங்கைமக்களே!
ஒடுக்கு முறைக்கு எதிராக குரல் எழுப்புவதற்கும், அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டங்களை நீக்கவும், மக்கள் ஆதரவு பெறாத ரணில் ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பவும், மக்கள் விருப்பத்திற்கு மாறாக செயற்படும் சூழ்ச்சிமிக்க அரசாங்கத்தை கலைத்து உடனடியாக தேர்தல் ஒன்றுக்கு செல்ல வைக்கவும், போராட்டக்காரர்களையும் மக்களையும் இணைத்து வலு சேர்ப்பதற்கான மக்கள் மன்றத்தை உருவாக்கிக்கொள்வதற்கும், நிறைவேற்று அதிகாரமுறையை உடனடியாக இல்லாதொழிக்கவும், புதியயாப்பை உருவாக்கி அமுல்படுத்தவும், அதற்காக போராடுவதற்கும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் சமூக முறைமையில் மாற்றத்தை உருவாக்கவும் ஒன்று சேருமாறு காலிமுகத்திடல் போராட்டக்காரர்களாகிய நாம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் எல்லா இலங்கையர்களிடமும் கேட்டுக் கொள்கிறோம்.
இப்பணியில் எம்மோடு இணையும்படி தொழிற்சங்கங்கள் சமூகமன்றங்கள் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் என அனைவரையும் அழைக்கின்றோம்.
(ஆகஸ்ட் 06, 2022)
A huge rally
A huge rally, public meeting and art events organized by the protesters of Kalimugam today. A huge rally, public meeting and art programs organized by Galle face activists in Colombo today. … . A massive rally, public meeting and art programs organized by Galle Face activists in Colombo today. part. 1
யாழ். இளைஞர்களின் புதிய பயணம் ஆரம்பம்
“கோட்டா கோ கம”வில் தற்காலிக கூடாரங்கள் அகற்றப்பட்டன
காலி முகத்திடலில் உள்ள, எஸ்.டப்ளியு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் சிலைக்கு அண்மித்த பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த “கோட்டா கோ கம”வின் தற்காலிக கூடாரங்கள் அகற்றப்பட்டன. இன்று (05) மாலை 5 மணிக்கு முன்னர், தற்காலிக கூடாரங்களை அகற்றிவிட்டு அவ்விடத்தில் இருந்து வெளியேறுமாறு ஒலி பெருக்கியின் மூலமாக அறிவித்தல் ஒன்றை பொலிஸார் விடுத்திருந்தனர்.
“கோட்டா கோ கம”: சட்டமா அதிபர் உறுதி
“கோட்ட கோ கம”வில் உள்ள சட்டவிரோத கூடாரங்கள் ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரை அகற்றப்பட மாட்டாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் உறுதியளித்துள்ளார். தேவையான சட்ட ஏற்பாடுகள் இல்லை என்றும் அவர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.