யாழ்ப்பாணம் நிலாவரைக் கிணற்றினுள் நடந்த ஆய்வினைப் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்
பெயர்க் காரணம்: பண்டைய காலத்தில் இக் கிணற்றின் ஆழம் யாருக்கும் தெரியாததால் இதன் ஆழம் வானில் உள்ள நிலா வரைக்கும் என சொல்லப்பட்டதால் இதன் பெயர் நிலாவரை என உருவாகியது.
The Formula
அரச உத்தியோகத்தர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகை தரும் போது பொருத்தமான ஆடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன இதனை தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் நேற்றைய தினம் குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு லடாக் செக்டாரில் உள்ள ரோந்துப் புள்ளி-15க்கு அருகில் உள்ள கோக்ரா ஹைட்ஸ்-ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் இந்தியா மற்றும் சீனாவின் இராணுவங்கள் பிரிவினை செயல்முறையை நிறைவு செய்துள்ளன. இரு தரப்பினரும் உராய்வு புள்ளியில் இருந்து துருப்புக்களை பின்வாங்கிய பின்னர் மற்றவர்களின் நிலைகளை சரிபார்த்துள்ளனர் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையுடனான தனது கடனை மறுசீரமைப்பது குறித்து இந்தியா பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைகள் கடந்த 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கைக்கு நீண்ட கால அடிப்படையில் உதவத் தயார் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.
இலங்கையின் பிரதான பாடசாலைகளில் தினமும் அரைமணிநேரம் காலைக்கூட்டம் நடத்தப்படுவதால் சுமார் 50 மாணவர்கள் மயங்கி விழுகின்றனர் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தில் தாம் திருப்தியடையவில்லை என்றும் குறித்த சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ கூறுகிறார். அநுராதபுரத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் இன்றையதினம் (21) குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.