பிரித்தானிய மன்னராக சார்ள்ஸ் நியமனம்

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து முன்னாள் இளவரசர் சார்ள்ஸ் ,பிரித்தானிய மன்னராக நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வழமைக்கு திரும்பிய தென்இலங்கை அரசியல்

(புருஜோத்தமன் தங்கமயில்)

மக்கள் போராட்டத்துக்குப் பயந்து, நாட்டை விட்டுத் தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, கடந்த வார இறுதியில் நாடு திரும்பி இருக்கிறார். அவரை, விமான நிலையத்தில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களும் முக்கியஸ்தர்களும் வரவேற்றனர். 

பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்..!

பிரபல இசையமைப்பாளரின் திடீர் மரணம், மலையாள திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான மலையாள ரசிகர்களின் மனதை தன்னுடைய இசையால் தன்வசப்படுத்தியவர்,  பிரபல இசையமைப்பாளர் 52 வயதான ஜான் பி வர்கி. இவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது.

அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது குறைப்பு; யார் விட்ட பிழை?

(புருஜோத்தமன் தங்கமயில்)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த செவ்வாய்க்கிழமை (30) முன்வைத்த இடைக்கால வரவு -செலவுத் திட்டத்தில், அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை 60ஆக நிர்ணயிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரச மற்றும் அரச சார் நிறுவனங்கள் பலவற்றில், ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லை 65ஆகக் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில், இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில், 60 வயதைக் கடந்துவிட்ட அனைத்து அரச ஊழியர்களும், எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியோடு, ஓய்வுபெற்றுச் செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

உதிர்ந்த மொட்டுக்குள் உட்பூசல் உக்கிரம்

டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுயாதீன எம்.பிக்கள் குழுவில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேலும் சில எம்.பிக்கள் விரைவில் இணையவுள்ளனர் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நூலின் அறிமுக நிகழ்வு

இலண்டனில் (இங்கிலாந்து) சனிக்கிழமை, செப்ரம்பர் 03, 2022 அன்று இடம்பெற இருக்கின்றது.

* விம்பம்* ஏற்பாட்டில், எதிர்வரும் சனி , இலண்டனில் 2 நூல்கள் அறிமுகமும்,

ஐ.எம்.எஃப் கடன்: பணியாளர் மட்டத்தில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது

நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கான அவசரகால கடனொன்றுக்கு இலங்கையும், சர்வதேச நாணய நிதியமும் (ஐ.எம்.எஃப்) வந்துள்ளதுடன், உத்தியோகபூர்வமான அறிவிப்பானது நாளை விடுக்கப்படுமென இவ்விடயம் குறித்து நேரடியாக அறிந்த நான்கு தகவல் மூலங்கள் தெரிவித்ததாக றொய்ட்டர்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடு திரும்புகிறார் கோட்டா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, நாளை மறுதினம் (03) சனிக்கிழமை காலை அவர் இலங்கையை வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.