Month: October 2022
இலங்கையில் மாகாணசபைகள்: இருக்கின்றன…. ஆனால் இல்லை
(அ. வரதராஜா பெருமாள்)
இலங்கையில் மாகாண சபைகள் ஜனாதிபதியின் பிரகடன அறிக்கை ஒன்றினாலோ அல்லது அமைச்சரவையின் தீர்மானம் ஒன்றினாலோ உருவாக்கப்பட்டதல்ல. மாறாக அவை இலங்கையின் பாராளுமன்றத்தினால் அரசியல் யாப்பின் 13வது திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டவை. அரசியல் யாப்பிலுள்ள ஒவ்வொரு விடயத்தையும் முறையாகவும் முழுமையாகவும் நிறைவேற்ற வேண்டியது இலங்கை அரசை ஆளுபவர்களினது தலையாய கடமையாகும். அவ்வாறான சத்தியப் பிரமாணத்தை செய்துதான் அவர்கள் ஆட்சிக் கதிரைகளில் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால், மாகாண சபைகள் தொடர்பான தமக்குரிய கடமைகளை இன்று வரை எந்த ஆட்சியாளரும் மேற்கொள்ளவில்லை. தமிழ்த் தலைவர்கள் என்போர் கூட அது தொடர்பாக சட்டபூர்வமாக கேள்வி எழுப்பி அந்தக் கடமையினை அரசு கட்டாயம் நிறைவேற்றுவதற்கான எதனையும் செய்யவில்லை.
ரிஷி சுனக்; நிறவெறிக்கு எதிரான குறியீடு அல்ல
கோவை குண்டு வெடிப்பில் 6 ஆவது நபர் கைது
புதிய பிரதமராகிறார் ரிஷி சுனக்
’எமது நிலம் எமக்கு வேண்டும்’ : வடக்கில் மக்கள் போராட்டம்
அவுஸ்திரேலியாவில் இலங்கையர்களுக்கு ஏற்பட்ட நிலை
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய 183 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக அவுஸ்திரேலிய கடல்சார் எல்லை கட்டளைத் தளபதியான அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் புது டெல்லியில் நடைபெற்ற ஆசிய கடலோர பாதுகாப்பு தலைமை முகவர்களின் கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை மக்கள் மிகவும் மோசமான பொருளாதார பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளதால், அங்கிருந்து வெளியேறுவதற்கான அழுத்தம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் படகுகள் மூலம் அவுஸ்திரேலியா வருவது சட்டவிரோதமானது எனவும் ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேறியது 22 ஆம் திருத்தச்சட்டம்
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிலையில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 179 வாக்குகளும், சட்டமூலத்திற்கு எதிராக 1 வாக்கும் பிரயோகிக்கப்பட்டன. அதற்கமைய அரசியல் அமைப்பின் 22 ஆம் திருத்த சட்டமூலம் 178 மேலதிக வாக்குகளால் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. மீண்டும் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, சட்டமூலத்திற்கு ஆதரவாக 174 வாக்குகள் பதியப்பட்டன. எதிராக எந்தவித வாக்குகளும் பதியப்படவில்லை. ஒருவர் வாக்களிப்பை புறக்கணித்திருந்தார்.
வரலாறு காணாத வீழ்ச்சியை சந்திக்கும் பிரித்தானியா
க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் அடுத்த ஆண்டுக்கு பிற்போடப்பட்டது
இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்து கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது. அதற்கமைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி நடத்துவதற்கும், க.பொ.த. உயர்தரப் பரீட்சையை அடுத்த வருடம் (2023) ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.