தெளிவத்தை ஜோசப் காலமானார்

இலங்கையின் மூத்த எழுத்தாளர் சாகித்தியரத்னா தெளிவத்தை ஜோசப் (சந்தனசாமி ஜோசப்) சுகவீனம் காரணமாக இன்று காலமானார். கடந்த சில மாதங்களாக சுகவீனமுற்றிருந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார். 

யாழ்.போதான வைத்தியசாலை படுகொலையின் 35ஆம் ஆண்டு நினைவு தினம்

யாழ்.போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் 35ஆவது ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.போதனா வைத்திய சாலையில் இன்றைய தினம் நடைபெற்றது. 

13ஐ அடியோடு ஒழிக்க வேண்டும்

இந்த நாடு பௌத்த நாடாக இருக்கும் வரையில் மட்டுமே ஏனைய இனத்தவர்கள்  அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ  முடியும். எனினும் வடக்கு கிழக்கு அதனை கடைப்பிடிப்பதில்லை, இதற்கு 13 ஆம் திருத்தச் சட்டமே  காரணம் என முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர இன்று (21)  பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

வில்வம் பழச்சாறு கலந்த பருகும் யோகட்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் விலங்கு விஞ்ஞானத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட “வில்வம் பழச்சாறு கலந்த பருகும் யோகட்” பானத்தில் அறிமுக நிகழ்வு நேற்றுப் புதன்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது.

மீள் வாசிப்புக்கு!

ஈழ விடுதலைப் போராட்டத்தை ஓர் மீளாய்வுக்குள் நிறுத்திய ஓர் உரையாடலை அரசியல் சமூகச் செயல்பாட்டாளர் ஜேம்ஸ் சிவா முருகுப்பிள்ளை செய்திருக்கிறார்.

ராஜபக்‌ஷர்களின் மீள்வருகைக்கான கட்டியம்

(புருஜோத்தமன் தங்கமயில்)

ராஜபக்‌ஷர்களை நாட்டின் காவலர்களாக முன்னிறுத்தும் பேரணிகளை, பொதுஜன பெரமுன மீண்டும் நடத்தத் தொடங்கிவிட்டது.  அடுத்த ஆண்டு ஆரம்பத்தில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற இருக்கின்றது. அந்தத் தேர்தலோடு ஆரம்பிக்கும் தேர்தல் திருவிழா, மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் என்று, எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு களைகட்டப் போகின்றது. அதைக் கருத்தில் கொண்டு ராஜபக்‌ஷர்கள், தங்களை மீண்டும் நிலைநிறுத்தும் வேலைகளை ஆரம்பித்து இருக்கிறார்கள்.

ஆதரவளிப்பேன் அரசாங்கத்தை பலப்படுத்த ஆதரவளியேன்

பாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பம் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வாக்களிக்கும் என்று அதன் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன ​தெரிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றும்  போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், நாங்கள் திருத்தத்துக்கு மட்டுமே ஆதரவாக வாக்களிக்க உள்ளோம். அரசாங்கத்தை பலப்படுத்த அல்ல என்றார்.  

பிரித்தானிய பிரதமர் பதவி விலகினார்

செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் லிஸ் டிரஸ் தாம் பதவியேற்ற 45 நாள்களில் பதவி விலகியுள்ளார்.