
அரசுக்கு எதிரான கண்டனப் பேரணி

The Formula
பெரும்பாலான பாலியல் துன்புறுத்தல்கள், நெருங்கிய உறவினர்களால், அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்களால் இடம்பெறுவது விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது. ஆகையால், கைக்கெட்டிய தூரத்தில் இருப்பவர்கள், உறவினர்களென உரிமை, சம்பந்தம் பேசுவோரிடம் மிகக் கவனமாகவும் அவதானமாகவும் இருக்கவேண்டும்.
ஒருவரின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத பலரும் அருகில் இருந்துகொண்டே குழியைப்பறித்து தடுத்துவிடுவோர்.
2011ஆம் ஆண்டில், லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் காணாமல் போனமை தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு குறித்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15ஆம் திகதி மன்றில் ஆஜராவதற்காக மீண்டும் நோட்டீஸ் பிறப்பிக்குமாறு உயர்நீதிமன்றம், இன்று (19) கட்டளையிட்டது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் , பாராளுமன்றத்தில் இன்று (19) உரையாற்றும் போது தெரிவித்தார்.
6 கடற்படையினருடன் காணாமல் போன கடற்படையின் கப்பலொன்று பானம முகாமுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என கடற்படை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 16ஆம் திகதி கடலில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த போது குறித்த கப்பலின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அக்கப்பலுடன் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாக கடற்படையினர் தெரிவித்திருந்தனர்.
பிரித்தானிய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வரிக்குறைப்பு திட்டங்களை முழுமையாக திரும்ப பெறுவதாக அந்நாட்டின் புதிய நிதி அமைச்சர் “ஜெர்மி ஹன்ட்” தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ்டர்ஸ் பதவி வகித்து வருகின்றார். இவர் கடந்த மாதம் வரிக் குறைப்புகளை ஆதரிக்கும் விதமாக சில திட்டங்களை வெளியிட்டார்.
“நடந்தாய் வாழி வழுக்கியாறு” எனப் புகழ்வாா் எனது அபிமான எழுத்தாளா் செங்கை ஆழியான்.
யாழ் நகரிலிருந்து மானிப்பாய் ஊடாக கீரிமலை நோக்கிச் செல்லும் வீதியில் சண்டிலிப்பாய் உள்ளது. பத்து கிலோ மீற்றர் தூரமும் இல்லை. எனது கிராமத்துக்குரிய சிறப்புகளில் ஒன்று – யாழ்ப்பாணத்திலே உள்ள ஒரே ஒரு ஆறான “வழுக்கியாறு” ( வழுக்கையாறு என்பாா்கள் பேச்சுத் தமிழில்.அதில் தவறில்லை )சண்டிலிப்பாயை ஊடறுத்தே ஓடுகிறது என்பதுவும் தான்.