கொத்துரொட்டி, பிரைட் ரைஸ் மற்றும் சோற்றுப் பொதி ஆகியவற்றின் விலைகள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Month: October 2022
இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று உயர்வு
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டு நாணய மாற்று விகிதங்களுக்கமைய இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று உயர்வடைந்துள்ளது. எனினும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மாறாமல் உள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை மாற்றமின்றி 369 ரூபாய் 91 சதமாக உள்ளது. அத்துடன், அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதி சற்று உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் ஸ்டெர்லிங் பவுண்டுக்கு எதிராக மேலும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
2 இலட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்
வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள் திணைக்களம் அபகரிக்கிறது
நிலங்கள் சம்மந்தமாக தொல்லியம் திணைக்களம் இது போல வெவ்வேறு சட்டங்களின் கீழ் இயங்கும் திணைக்களங்கள் மக்களுடைய காணிகளை அபகரிக்கும் செயற்பாடு வடக்கிலும் கிழக்கிலும் நீண்ட காலமாக இடம் பெற்று வருகின்றது.என ஜனாதிபதி சட்டத்தரணியுமான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.