‘குழந்தைகளுக்கு அவரது உடலை காட்ட உதவுங்கள்’

கனடாவிற்கு செல்ல முற்பட்ட இலங்கையர்கள் வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு உயிரிழந்த யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் உடலை இலங்கைக்கு எடுத்துவர நடவடிக்கை எடுக்குமாறு அவரது மனைவி உருக்கமான கோரிக்கையை விடுத்துள்ளார். 

விடுதலைப்புலிகளின் தடையை இந்தியா நீக்கும்

அண்மையில் இந்தியாவின் தலைநகருக்கு நாங்கள் அழைக்கப்பட்டு சந்திப்புக்களை நடத்தியுள்ளோம். தமிழர்களின் பிரதிநிதிகளாக அங்கிகாரத்தினை இந்தியா வழங்கியுள்ளது. அந்த அடிப்படையில் எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கான தடையினை இந்தியா நீக்கவுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்

பாகிஸ்தானின் நெருக்கடியும் பிராந்திய அரசியலும்

உலகில் அரசியல் கொந்தளிப்புகளை எப்போதும் இயங்கு நிலையில் வைத்திருக்கும் ஒரு நாடுதான் பாகிஸ்தான். தற்போது இந்த நாடு அரசியல் கொந்தளிப்புக்கு மட்டுமல்லாமல்,  மிகப்பொிய பொருளாதார நெருக்கடிக்கும் முகம்கொடுத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இன்று சந்திப்பு

தமிழ் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில், கொழும்பில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது. அரசியல் தீர்வு மற்றும் தற்போதைய அரசியல் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. குறித்த கூட்டம் கடந்த 15ம் திகதி இடம்பெறவிருந்த நிலையில், அழைப்பு விடுக்கப்பட்டதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அன்றைய தினம் இடம்பெற்றிருக்கவில்லை.

எரிபொருள் கொள்வனவு – ரஷ்யாவிடம் பேச்சு

சலுகை விலையில் எரிபொருளை பெற்றுக்கொள்வது குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்திய ஊடகம் ஒன்றுக்கு  தெரிவித்துள்ளார். சர்வதேச நீதி வரையறைக்கு உட்பட்டு ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  அவர் கூறியுள்ளார்.

வீதிக்கு குறுக்காக உயிரிழந்த நிலையில் முதலை

யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு வீதியில் இடைக்காடு பகுதியில் உயிரிழந்த நிலையில் முதலையொன்று இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அச்சுவேலியில் இருந்து தொண்டைமானாறு செல்லும் வீதிக்கு குறுக்காக உயிரிழந்த நிலையில் முதலை இருப்பதாக இன்று(25) காலை அவ்வீதியால் பயணித்தவர்கள் தெரிவிக்கின்றனர். 

ஆட்டம் ஆரம்பம் அது உதை பந்தாட்ட திருவிழாவாக……

(சாகரன்)

பன்னிரண்டு வருடத் தயாரிப்பு 5000 பேருக்கு அதிகமானவர்களின் உயிர் இழப்பு… தியாகம் சர்வதேச நாடுகள் மனித உரிமை அமைப்புகளின் கண்டனம் எண்ணை வருமானத்தால் இவை எல்லாவற்றையும் செய்து காட்டிய சிறிய நாடு எட்டு புதிய விளையாடுத் தளங்களை அமைத்து உலக நாடுகள் நிராகரிக்க முடியாத அளவிற்கு உலக கோப்பையிற்கான உதைப்பந்தாட்டப் போட்டி ஆரம்பமாகியுள்ளது கட்டாரில்.

குட்டையை குழப்புவாரா பசில்?

(எம்.எஸ்.எம் ஐயூப்)

அமெரிக்காவுக்குச் சென்றிருந்த முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, ஞாயிற்றுக்கிழமை (20) நாடு திரும்பிய போது அவரை வரவேற்க, கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றிருந்த கூட்டத்தைப் பார்க்கும் போது, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர், மஹிந்த ராஜபக்‌ஷவைப் பார்க்க, மக்கள் சாரிசாரியாக திஸ்ஸமகாராமையிலுள்ள ‘கால்டன்’ என்று பெயரிடப்பட்டுள்ள அவரது இல்லத்துக்குச் சென்றமை நினைவுக்கு வருகிறது.

10 இலங்கையர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை, மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்ட 2 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை தமிழர்கள் 10 பேர், தனுஷ்கோடி வந்து இறங்கினர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.