மற்றுமோர் அரகலயவை அடக்குவேன்: ஜனாதிபதி

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வரையிலும் பாராளுமன்றத்தை கலைக்கமாட்டேன் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மற்றுமோர் அரகலயவுக்கு இடமளிக்கமாட்டேன். அதனை இராணுவத்தை கொண்டு அடக்குவேன். அவசரகாலச் சட்டத்தையும் அமுல் படுத்துவேன் என்றார். பாராளுமன்றத்தில் இன்று (23) உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இனப்பிரச்சினைக்கு நி​ரந்த தீர்வு காண சகலரையும் அழைத்தார் ஜனாதிபதி

இலங்கையில் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக வரவு-செலவுத் திட்டம் நிறைவடைந்த அடுத்த வாரத்தில் பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம்

புவிசார் அரசியல் காற்று எந்த வழியில் எப்படி வீசுகிறது? என்பதை கூர்மையாக அவதானிப்பதற்கான ஒரு சந்தா்ப்பத்தை அண்மையில் நடந்து முடிந்த ஜி20 உச்சி மாநாடு  வழங்கியிருக்கிறது.

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் – 02: இத்தாலியில் மீண்டும் முசோலினி ஆட்சி

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

நோர்வேஜிய நிகழ்வோடு, முசோலியின் வருகையின் நூற்றாண்டுக்குப் பின்னரும், வலதுசாரி தீவிரவாதம் எவ்வாறு செல்வாக்குள்ள ஒன்றாகத் தொடர்வதைக் கடந்தவாரம் பார்த்தோம்.  இத்தாலியின் தலைநகர் ரோமில், முசோலினி தனது அணிவகுப்பை நிகழ்த்தி ஒரு நூற்றாண்டு கடந்த நிலையில், புதிய பாசிச மற்றும் தீவிர வலதுசாரி சக்திகள் உலகெங்கும் அதிகரித்துள்ளன. 

இலங்கையின் பொருளாதாரநோயைசமாளிக்கும் ரணில் அரசபொருளியல் (Ranil Politinomics) பகுதி – 5

(அ. வரதராஜா பெருமாள்)

உலகவிலைஉயர்வாலேயே ஏற்றுமதிவருமானஅதிகரிப்பு

  1. கடந்தசிலமாதங்களாகஏற்றுமதிவருமானங்கள் அதிகரித்திருப்பதாகஅரசஅறிக்கைகள் அடிக்கடிதெரிவிக்கின்றன. இதனுடையஅர்த்தம் ஏற்றுமதிசெய்யப்படும் பொருட்கள் தொகைரீதியில் குறிப்பிடத்தக்கஅளவுக்குஅதிகரித்திருக்கின்றனஎன்பதல்ல. ரஸ்ய –உக்ரைன் யுத்தத்தின் காரணமாகவும் அதனையொட்டி ரஸ்யாவின் சர்வதேசவர்த்தகத்துக்குஎதிராகஅமெரிக்கவிதித்துள்ளபொருளாதாரதடையினாலும் பொதுவாகவேஉலகசந்தையில் பொருட்களின் விலைகள் உயர்ந்திருக்கின்றன. இலங்கையின் ஏற்றுமதிகள் பெரும்பாலும் அமெரிக்கா,ஐரோப்பியநாடுகள்,பிரித்தானியாமற்றும் கனடாஆகியநாடுகளுக்கேசெல்கிறது. இந்தநாடுகள் அனைத்திலும் ஏறத்தாழஅனைத்துவகைப் பொருட்களினதும் விலைகள் அதிகரித்துள்ளன. இந்தநிலையில் இலங்கைஏற்றுமதிசெய்யும் பொருட்களினதுவிலைகளும் கணிசமாகஅதிகரித்திருக்கின்றன.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு


(சாகரன்)

ரூபாயில் உழைத்து ரூபாயில் செலவு செய்து வாழ்ந்த காலம் ஒன்று இருந்தது… டாலரில் உழைத்து ரூபாயில் செலவு செய்தது என்று இன்னொரு காலம் இருந்து ரூபாயில் உழைத்து டாலரில் செலவு செய்வதாக மாறி இருப்பது இன்றைய காலம். இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலமையை இவ்வாறுதான் சொல்லத் தோன்றுகின்றது.

பொலிஸ் அதிகாரிகளை கட்டியணைத்தது ஏன்?

பொலிஸ் அதிகாரிகளைக் கட்டிப்பிடித்தாக தான் குற்றம் சாட்டப்பட்டதாகவும் ஆனால் தான் கட்டிப்பிடித்த போது, தன்னை அவர்கள் ஒதுங்கச் சொல்லவில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.

பஸ் டிக்கெட் வழங்க தானியங்கி முறை

பஸ் பயணச்சீட்டுகளை (டிக்கெட்) வழங்குவதற்கு புதிய தானியங்கி முறையை அறிமுகப்படுத்தும் முன்மொழிவுக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார நோயை சமாளிக்கும் ரணில் அரசபொருளியல் (Ranil Politinomics)பகுதி – 4


(அ. வரதராஜா பெருமாள்)


அரசு சார்ந்தோர்க்கு தாராளங்கள் மக்கள் முதுகில் ஏற்றும் சுமைகள்

12. தாராளவாத பொருளாதாரக் கொள்கையானது, உற்பத்திகளும், விற்பனைகளும், ஏற்றுமதிகளும் இறக்குமதிகளும், விநியோகங்களும் கொள்வனவுகளும் முழுக்க முழுக்க சந்தை செயற்பாடுகளால் நடைபெற வேண்டுமே தவிர அரசின் செயற்பாடுகளோ தலையீடுகளோ அதில் இருக்கக் கூடாது என்கிறது. இதனை சொல்லித்தான் 1977ல் ஜே.ஆர். ஜெயவர்த்தனா திறந்த பொருளாதாரக் கொள்கையை இலங்கையில் நடைமுறைப்படுத்தினார்.

ஒரு பழங்கதை சொல்கிறேன் கேளுங்கள்…..

(Rathan Chandrasekar)

சென்னை. கோடம்பாக்கம். ஜக்கரியா காலனி.

பெண்களும் ஆண்களுமாக இலங்கைப் போராளிக் குழுவினர் சிலர் அங்கு வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்தார்கள்.

நெடிய வலுவான வசீகரமான தோழர் ஒருவர்தான், அவர்களின் தலைவர் என்று அறியப்பட்டார்.