அமெரிக்க விசா பெறுவதில் சீனாவை இந்தியா முந்திவிடும்

2023ஆம் ஆண்டு கோடை காலத்துக்குள் அமெரிக்க விசாக்களை பெறும் எண்ணிக்கையில், சீனாவை இந்தியா முந்திவிடும் என்று எதிர்பார்ப்பதாகவும் விசா பெறுவதில் மெக்சிகோவுக்கு அடுத்தபடியாக 2ஆவது இடத்தைப் பிடிக்கும் என்றும் புதுமெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

திரு காண்டீபன் அவர்கள் தொடர்பில் வரதராஜ பெருமாள் அவர்களின் சிறியதோர் மீள்பார்வை

காண்டீபனின் இறப்பு இதயத்தைக் கனமாக்குகிறது. 1973ன் ஆரம்ப மாதங்களில் அடிக்கடி சந்தித்தோம். அப்போதுதான் தமிழ் இளைஞர் பேரவை உருவாக்கப்பட்டு ஊர் களெங்கும் நாங்கள் ஓடி அரசியல் வேலைகள் செய்த காலம். யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத் தெருவில் இருந்த தமிழரசுக் கட்சியின் தலைமைக் காரியாலமே எங்களின் பிரதான சந்திப்பிடம்.

சிறப்பு முகாமில் முருகன்; ராஜீவ் காந்தி விளக்கம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன், ராபர்ட் பயஸ், சாந்தன், ரவிச்சந்திரன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் – 01: முசோலினியின் நூறு ஆண்டுகளின் பின்னர்…

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

அதுவோர் அழகிய நாள்! இலையுதிர்காலம் முழுமையாகத் தன்னை வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தது. அந்த ஓக்டோபர் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையே, கதிரவன் தன் கதிர்களைப் பரப்பி, ஒருவித மகிழ்ச்சியைத் தரும் ஆண்டின் இறுதித் தினமென்பதைப் பலர் அறிவர். 

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட விவகாரம்: பேரணிக்கு தடை

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 32 வருடங்களாகியுள்ள நிலையில் கிளிநொச்சி, நாச்சிக்குடா கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் ‘ எமது உரிமை மீட்புப் போராட்டம்’ என்னும் தொனிப்பொருளில் நடைபவணி  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஒரே பார்வையில் 2023 பட்ஜெட்

நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் நேற்று (14) சமர்ப்பித்த 2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட (பட்ஜெட்) முன்மொழிவுகளை ஒரே பார்வையில் தருகின்றோம்.

சஜீத் அணியில் நால்வர் இணைந்தனர்

பாராளுமன்றில் சுயாதீன உறுப்பினர்களாக செயற்பட்ட நால்வர் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்துகொண்டனர். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரகடனப்படுத்தி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு பின்னர் சுயாதீன உறுப்பினர்களாக இவர்கள் செயற்பட்டனர். அநுர பிரியதர்ஷன யாப்பா, சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே, சந்திம வீரக்கொடி மற்றும் ஜயரத்ன ஹேரத் ஆகியோரே இவ்வாறு இணைந்துகொண்டனர்.

புத்தக வெளியீடு…. மதிப்புரை

தவிர்க்க முடியாத காரணத்தால் நிகழ்வு வேறு ஒரு திகதியிற்கு மாற்றப்பட்டுள்ளது விபரம் பின்பு அறியத் தருகின்றோம். – நிகழ்வு ஏற்பாட்டாளர்கள்

No description available.

போலி உறுதி முடிப்பு: 09 பேருக்கு விளக்கமறியல்

போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி மற்றும் முன்னாள் பாடசாலை அதிபர் உள்பட 9 பேரையும் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியில் வைக்க யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் திருமதி நளினி சுபாஸ்கரன் கட்டளையிட்டார்.

சீரற்ற காலநிலையால் யாழில் 221 குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 221 குடும்பங்களைச் சேர்ந்த 733 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் டி.என்.சூரியராஜா தெரிவித்ததுள்ளார்.