அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) விருப்பம் தெரிவித்துள்ளது. இ.தொ.கா.வின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் இதனை தெரிவித்தார். எவ்வாறாயினும், அரசாங்கத்தில் இணைவது என்பது இ.தொ.காவுக்கு வழங்கப்படும் அமைச்சினை பொறுத்தது என்று அவர் கூறியுள்ளார்.
Month: November 2022
மேற்கு ஆப்பிரிக்காவில் சீனாவின் சுற்றுச்சூழல் பேரழிவு
ஆப்பிரிக்கக் கண்டத்தில் சீனக் கடனைத் தூண்டும் உட்கட்டமைப்புத் திட்டங்கள், உணர்திறன் நிறைந்த பகுதிகளில் மீளமுடியாத சூழலியல் கேடுகளை ஏற்படுத்தியுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக சீனாவுடனான தனது ஈடுபாட்டை அதிகரிக்கத் தொடங்கிய மேற்கு ஆப்பிரிக்கா, இத்தகைய சீன சிதைவுகளில் முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறது.
வட்டுவாகல் பாலத்தை வெட்டிவிடுங்கள்…
மீட்கப்பட்டவர்களில் 76 பேர் யாழை சேர்ந்தவர்கள்
சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் மலேசியாவுக்கு சென்று அங்கிருந்து படகில் பயணித்துள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன், மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் தற்போது வியட்நாமில் உள்ள வுங் தாவோ துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
மத மாற்றமும் மன மாற்றமும்
சீனா: புதிய கூட்டாளிகளும் பழைய எதிரிகளும்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
சீன கம்யூனிஸ்ட் கட்சி, அதன் 20ஆவது தேசிய காங்கிரஸை ஒக்டோபர் 16 முதல் ஒக்டோபர் 22 வரை நடத்தியது. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மாநாட்டில், கட்சியின் 96 மில்லியன் உறுப்பினர்களின் பிரதிநிதிகள், அதன் உயர்மட்ட தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் கட்சிக்கு எதிர்கால திசையை அமைப்பதற்கும் கூடினார்கள்.
துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக ஹிருணிகா முறைப்பாடு
இரு மாணவர்களுக்கு இடையே மோதல்: 13 வயது மாணவன் உயிரிழப்பு
இரண்டு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், 13 வயதான மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம், அம்பாறையில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம்தில் 8 ம் ஆண்டில் கல்வி கற்றும் இரு மாணவர்களுக்கிடையே பாடசாலையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
புத்தகம் அனுப்பியாகிவிட்டது இன்னும் சில தினங்களில் தங்களிடம் வந்து சேரும்
சிறுவர்கள், பெண்கள் உள்ளடங்கலாக 305 இலங்கை அகதிகள் உள்ள கப்பல் மூழ்கிக் கொண்டிப்பதாக இன்று காலையில் அக்கப்பலில் இருந்தவரொருவர் தெரிவித்த ஒலிப்பதிவு வெளியான நிலையில், அகதிகள் எனச் சந்தேகிக்கப்படும் 300 பேர், அவர்களின் படகு மூழ்க ஆரம்பித்த நிலையில் சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படை இன்று தெரிவித்துள்ளது.
நவம்பர் -02 உள்ளிட்ட போராட்டங்கள் எதற்காக?
(என்.கே அஷோக்பரன்)
(இந்தப் பத்தி எழுத்தாளரின் கருத்துகளில் உடன்பாடுகள் இல்லையாகினும் இந்தப் பார்வை வாசகர் மத்தியில் விவாதத்திற்காக முன்வைக்கின்றோம் – ஆர்)
வரலாறு காணாத மக்கள் எழுச்சியை இலங்கை சந்தித்து, அதன் வாயிலாக, 2019 நவம்பரில் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ, வெறும் இரண்டரை ஆண்டு பதவிக்காலத்துக்குள் பதவி விலகியமை, பெரும் வரலாற்று நிகழ்வு. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.