60% க்கு மேல் மின்சார கட்டணம் உயரும்

மின்சாரக் கட்டணத்தை 60 – 65 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் றொஹான் செனவிரத்ன தெரிவித்தார். மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சின் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார். 

இந்தியாவின் ஆதரவுக்கு நன்றி: உக்ரேன் ஜனாதிபதி

ஐ.நா.வில் இந்தியா அளித்த மனிதாபிமான உதவிகள் மற்றும் ஆதரவுக்கு உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி, உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் தொலைபேசி வாயிலாக பேசினார்.

இலக்கிய ஆய்வுக்குப் புதிய பாதை அமைத்தவர்!


(இராம. சுந்தரம்)

‘எனது வகுப்பு மாணவர்களில் பலர் பரலோகம் செல்வதற்காகச் சுளுவான வழியைக் கண்டு பிடித்தார்கள். அவர்களிடம் தேவாரம் திருவாசகம்,பைபிள், குர்ஆன் இருக்கும். அவர்களுள் வித்தியாசமான ஒரு மாணவன் இருந்தான். அவன் சமூக, விஞ்ஞான ஆய்வு நூல்களை வைத்துக்கொண்டு பூலோகத்தைப் பார்க்கத் தலைப்பட்டான் அவர்களோ வானம் பார்த்த பூலோகவாசியானார்கள். இவன் பூலோகம் பார்த்த சமூக விஞ்ஞானியானான்’.

மனசாட்சியை உலுக்கிய வார்த்தைகள்

மார்க்சின் மனைவி ஜென்னி சொல்லுகிறார்:

“உலகத்தில் எந்தப் புத்தகமும், இவ்வளவு துன்பங்களுக்கு நடுவே எழுதப்பட்டு இருக்காது. துயரங்களுக்கு மத்தியிலே எழுதப்பட்டு இருக்காது. எங்களுக்குப் பிறந்த மூன்று குழந்தைகள், ஏற்கனவே இறந்து விட்டன. வீட்டில் உணவு இல்லை. ரொட்டி வாங்கப் பணம் இல்லை.

இருக்கின்ற பிள்ளைகள் பசியால் துடிக்கிறார்கள். என் மகன் பிரசிசுகா, ஒரு வயதுப் பிள்ளை. என் உடலில் வலு இல்லை. நான் சாப்பிட்டுப் பல நாள்கள் ஆயிற்று. அந்தக் குழந்தை பாலுக்கு அழுகிறான். என் மார்பிலே பல்லை வைத்து, பாலுக்காக உறிஞ்சுகிற போது, அவனது பற்கள் பட்ட இடத்திலே தோல் வெடித்து ரத்தம் கொட்டுகிறது. அந்தப் பிஞ்சுக் குழந்தையின் நடுங்கிய உதடுகளிலே ரத்தத் துளிகள் விழுகின்றன.

கொடுத்த கடனுக்காக வீட்டுப் பொருள்களைப் பறிமுதல் செய்ய, கடன்காரர்கள் வந்து விட்டார்கள். வீட்டில் இருக்கின்ற படுக்கை, கம்பளி, துணிமணி மட்டும் அல்ல, குழந்தையின் தொட்டிலையும் எடுத்துக்கொண்டு போகிறார்கள். பனிபடர்ந்த தரையில், உடைகள் இல்லாமல், என் பிள்ளைகளோடு நடுங்கியவாறு நாங்கள் படுத்துக் கிடந்தோம். பிரசிசுகாவும் செத்துப் போனான். நான்காவது குழந்தையும் இறந்து போயிற்று.

அவன் பிறந்த போது, அவனுக்குத் தொட்டில் வாங்கக்
காசு இல்லை: இறந்த போது, சவப்பெட்டி
வாங்கவும் காசு இல்லை.

மனிதகுல வரலாற்றையே மாற்றி அமைத்த டாஸ் கேபிடல் மூலதனம் என்ற நூலைப் படைப்பதற்காக மட்டும் 1700 நூல்களுக்கு மேல் படித்த மாமேதை மார்க்சின் வாழ்க்கை.

பங்களாதேஷ்: போரில் பிறந்த தேசம்

“நாம் ஒருவரை முற்றிலும் சாா்ந்தோ அல்லது தனித்தோ இருக்க முடியாது ஆனால் இவ்வுலகில் நாம் ஒருவரை ஒருவா் சாா்ந்து வாழ்கிறோம்”    இந்தியாவின் முன்னாள் பிரதமா் ஜவஹா்லால் நேருவின் கூற்று இது.

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில்-06: ஜேர்மன் சதிமுயற்சியின் அதிர்வலைகள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஜேர்மனியில் அரசாங்கத்துக்கு எதிரான சதியில் ஈடுபட்டதற்காக, வலதுசாரி தீவிரவாதிகளை ஜேர்மன்  பொலிஸார் கடந்தவாரம் கைது செய்தனர். 

போதைப்பொருளுடன் 47 பேர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் சந்தேக நபர்கள் 47 பேர் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேல் மாகாணத்தில் உள்ள 149 பாடசாலைகளை உள்ளடக்கி இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

வியட்நாமிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப விருப்பம்

கனடாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயற்சித்தபோது, படகு பழுதடைந்த நிலையில் வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 302 இலங்கையர்களில் 152 பேர் மீண்டும் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் குறித்த 152 பேரும் நாடு திரும்புவதற்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கோரிக்கைக்கு இணங்க 302 இலங்கையர்களுக்கு உதவியதற்காக ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்புக்கு அமைச்சர் இதன்போது நன்றி தெரிவித்தார்.

கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு மனோ ஆதரவு

அரசியலமைப்பு பேரவையில் நியமிக்கப்பட உள்ள ஏழு எம்.பிக்களுக்கான நியமனங்களில், ஐந்து சிங்கள எம்.பிக்களும்,  ஒரு முஸ்லிம் எம்.பியும் இப்போது பெயரிடப்பட்டுள்ளார்கள். இறுதி ஏழாவது எம்பியாக ஒரு தமிழ் எம்இபி இருக்க வேண்டும் என்பது மிக, மிக நியாயமான ஒரு எதிர்பார்ப்பாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி தெரிவித்தார்.