வோஸ்ட்ரோ கணக்குகள் திறக்கப்பட்டன

இலங்கையைச் சேர்ந்த வங்கிகளால், வோஸ்ட்ரோ கணக்குகள் எனப்படும் சிறப்பு ரூபாய் வர்த்தகக் கணக்குகளைத் திறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மண் அகழ்வும், மரம் கடத்தலும்….

பழையமுறிகண்டி கிராமத்தில் கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்கின்ற மணல் அகழ்வுகளுக்கு அனுமதி வழங்குபவர்கள் யார் என கிராம மக்கள் வினா எழுப்பியுள்ளனர்.

பாலின சமத்துவ சட்டமூலத்தின் முதலாம் வரைபு நிறைவு

பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவது தொடர்பான சட்டமூலத்தின் முதலாம் வரைபு நிறைவடைந்துள்ளதாக இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் தெரியவந்தது.

வன்னிப் பெருநிலப்பரப்பில் மீண்டும் அரியதொரு தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிப்பு

(December 15, 2022 | Ezhuna)

இந்தக் கட்டுரைத் தொடர், சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடபகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், இலங்கையில் பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்களின் நிலை, அவர்களின் கலாசார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை வெளிக்கொணர்வதாக அமைகின்றது.

ஈரான் கால்பந்து வீரருக்கு மரண தண்டனை

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஈரான் கால்பந்தாட்ட வீரர் அமீர் நசீருக்கு (26) தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

கனடாவில் வாடகை வீட்டில் வசித்து வரும் குறைந்த வருவாய் கொண்டவர்களுக்கு, அந்நாட்டு அரசு 50 டொலர்கள் உதவித்தொகையாக  வழங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணி தொடர்பில் மைத்திரியின் அறிவிப்பு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஏனையக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ளதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

தலைமன்னார் துறைமுகம்: செந்திலுக்கு ஜனாதிபதி பணிப்பு

தலைமன்னார் துறைமுகத்தை தொழில்துறைமுகமா மாற்ற தேவையான இருப்பக்க ஆய்வை  மேற்கொள்ளுமாறு  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

எப்போது மீண்டு வரப் போகிறது இலங்கை?

2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், தொற்றுநோய்ப் பரவலின் முடிவானது துயரத்தின் முடிவைக் குறிக்காது என்று இலங்கையர்கள் எவரும் நினைத்திருக்க மாட்டார்கள், எனினும் இலங்கையர்கள் அறியாத வடிவங்களில் வரும்  துயரத்தின் வருகையை அது சமிக்ஞை செய்தது. 

விலைகளை குறைத்தது லங்கா சதொச

லங்கா சதொச இன்று (14) முதல் அமுலுக்கு வரும் வகையில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளன. பருப்பு 4 ரூபாவினாலும், கோதுமை மா 15 ரூபாவினாலும் வெள்ளைப்பூடு 35 ரூபாவினாலும் பெரிய வெங்காயம் 9 ரூபாவினாலும் டின் மீன் (உள்நாட்டு) 5 ரூபாவினாலும் குறைத்துள்ளது.