அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை

பாஸ்மதி தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. கப்பல்கள் மூலம் இலங்கைக்கு தற்போது கொண்டு வரப்படும் அரிசி தொகை மற்றும் டிசம்பர் 09 ஆம் திகதிக்கு முன்னர் கடன் கடிதங்கள் வௌியிடப்பட்ட ஓடர்களை விசேட அனுமதிப் பத்திரத்தின் ஊடாக துறைமுகத்தில் இருந்து விடுவிக்க முடியும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

60இல் கட்டாய ஓய்வு: நீதிமன்றம் அதிரடி

அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 வருடங்களாகக் குறைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இருந்து வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்திய ஆலோசகர்களை உள்ளடக்குவதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (14) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

75ஆவது சுதந்திர தினத்துக்குள் இனப் பிரச்சினைக்கு தீர்வு

எதிர்வரும் 75ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்துக்குள் இனப்பிரச்சினைக்கு  தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

காத்தான்குடி பள்ளிவாசல் எடுத்திருக்கும் முடிவு

போதைப்பொருள் பயன்படுத்தும் மற்றும் வியாபாரம் செய்பவர்களுடைய ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் புதிய காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

கால்நடை இறப்புக்கான காரணம் வெளியானது

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடுமையான குளிரால் ஏற்பட்ட அதிர்ச்சியினால் 1,660 கால்நடைகளும் இறந்துள்ளதாகவும் நோயினால் அல்ல என்றும் பேராதனை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

பனை

பனை மரங்கள் அபிவிருத்தி அடைந்த வல்லரசு நாடுகளிலே செழித்து வளரக் கூடியனவாக இருந்திருந்தால் பனம்பழங்கள் ஒவ்வொன்றும் ஈய உறைகளிலே சுற்றப்பட்டு அதன்மேல் ஸ்ரிக்கர்ஒட்டப்பட்டு பாரிய விளம்பரங்களுடன் இங்கு இறக்குமதியாகி வந்திருக்கும்.

பெருந்தோட்ட கல்வித்துறை வீழ்ச்சி

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு வருகைத் தரும் மாணவர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதென தெரிவித்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இது பெருந்தோட்ட கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள  பாரிய பின்னடைவு  என்றார்.

கல்வி அமைச்சு எடுத்துள்ள புதிய தீர்மானம்

முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவது பாடசாலைகளால் மாத்திரமே மேற்கொள்ளப்படும் எனவும், கல்வி அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படாது எனவும் கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

யாழ்-சென்னை நேரடி விமான சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் மற்றும் சென்னைக்கு இடையேயான நேரடி விமான சேவை 2 வருடங்கள் கழித்து ​டிசெம்பர் 12ஆம் திகதி இன்று   காலை மீண்டும் ஆரம்பமானது. சென்னையில் இருந்து புறப்பட்ட முதலாவது விமானம் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அலையன்ஸ் ஏர் வாரத்தில் நான்கு நாட்கள் சேவையில் ஈடுபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பலாலிக்கான விமான சேவை இன்று மீண்டும்

தொடர்ச்சியான பல்வேறு முயற்சிகளின் பலனாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பலாலிக்கான விமான சேவையை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.