1.13 பில்லியன் அமெரிக்க டொலர் சுற்றுலா வருமானம்

2022 ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறை மூலம் 1.13 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் 7 இலட்சத்து 19 ஆயிரத்து 978 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு சுற்றுலா மேற்கொண்டனர். கடந்த 2021 ஆம் ஆண்டு, சுற்றுலாத்துறை மூலம், 506.9 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இதன்படி, 2022ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறை வருவாய், 124.2 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. (a)

கடவுச்சீட்டை பெற்றனர் இலங்கை அகதிகள்

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் மங்களூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 38 இலங்கையர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பில் கூடியது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம், மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் சனிக்கிழமை (07) காலை நடைபெற்றது.

2 நாட்கள் ரஷ்யா விடுத்த போர் நிறுத்த அறிவிப்பை உக்ரேன் நிராகரித்தது

ரஷ்யாவில் பாரம்பரிய கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுவதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ஜனாதிபதி புட்டின் அழைப்பு விடுத்திருந்தார்.

மக்கத்துச் சால்வை Slm Hanifa பச்சோந்தியான கதை தொடர் 1 ..

அஷ்ரப் அவர்கள் மறைந்ததும் சில நாட்களின் பின்னர் ‘எங்கள் தேசம்’ பத்திரிகையில் ‘அஷ்ரப் – சில நினைவுகள்’ என்று வாரா வாரம் ஒரு கட்டுரைத் தொடரை எழுதுகிறேன்.

சுரண்டிப் பார்க்க ஒரு தருணம்

ஆட்சியில் இருக்கும் அரசாங்கம், தமது பலத்தை சுரண்டிப் பார்ப்பதற்கு முன்னர், தமக்கேற்ற சுற்றுவட்டத்தை ஏற்படுத்திக்கொண்டு, தேர்தலுக்குச் செல்லும். எதிர்பார்த்ததைப் போல மக்கள் ஆணை கிடைக்காவிடின், அடுத்தடுத்த தேர்தல்களுக்குச் செல்வதை காலந்தாழ்த்திவிடும்.

இதற்கு பொலிஸ் அதிகாரிகளை அழைக்க வேண்டாம்…

பாடசாலை மாணவர்களின் புத்தக பைகளை சோதனையிடுவதற்காக பொலிஸ் அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

சங்கமித்தவின் ​அற்புதமான பணி: இலங்கை கலாசாரத்துக்கான ஒரு திருப்புமுனை

இலங்கையில் சமீபத்தில் அதிக மழை பெய்து கொண்டிருந்தது, பௌத்த நம்பிக்கையின் படி, இல் மாதத்துடன் ஒத்துப்போகும் ஒரு நிகழ்வு, பெரும்பாலும் மழை மாதம் என்று குறிப்பிடப்படுகிறது. பருவமழைக்கு இடைப்பட்ட அமர்வு நவம்பர் மாதத்தில் அதிக மழையைப் பெறுகிறது,

எங்களையும் சேருங்கள்: ஹக்கீம் கோரிக்கை

இனப் பிரச்சினைக்கு அனைவரும் இணங்கக்கூடிய நல்லதொரு தீர்வை ஜனாதிபதி வழங்குவாராக இருந்தால் அதில் முஸ்லிம் தரப்பையும் இணைத்துகொள்ள வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகள் குறித்து முஸ்லிம்கள் மத்தியில் விசமத்தனமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

பணிப்பாளர் நாயகமாக நியமனம்

விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக, மட்டக்களப்பு ஆரையம்பதியை சேர்ந்த மாலதி பரசுராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவிக்கு முதன்முதலாக நியமிக்கப்பட்ட தமிழ் பெண்ணாக மாலதி பரசுராமன் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.