கப்பல் சேவை மூலம் வடமாகாணத்தை முன்னேற்ற முடியும்

கப்பல் சேவை மூலம் வடமாகாண பொருளாதாரத்தை முன்னேறக் கூடிய சாத்தியம் இருப்பதாக யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தலைவர் இரத்தினலிங்கம் ஜெயசேகரன் தெரிவித்தார். நேற்று (05) யாழ். வணிகர் கழகத்தில் நடைபெற்ற  ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இல்லாமல் செய்யப்பட்ட அதிகாரங்களை மீளக் கையளிக்க வேண்டும்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமல்ப்படுத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், முதல் கட்டமாக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தின் மூலமும், நிர்வாக ஏற்பாடுகளுக்கு ஊடாகவும் காலத்திற்கு காலம் இல்லாமல் செய்யப்பட்ட அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு மீளக் கையளிக்க வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

போராட்டங்களில் குதிப்போம்: கூட்டமைப்பு எச்சரிக்கை

சமஸ்டி கட்டமைப்பில் மட்டுமே தமிழ் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு சாத்தியம் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என தெரிவிக்கும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, ஜனாதிபதி வழங்கிய காலக்கெடுவுக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்கவில்லை என்றால், தமிழ் மக்களை அணி திரட்டி போராட்டங்களில் ஈடுபடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

சாதிப் பிரச்சனையும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும்.

(டாக்டர் ஜி. ஆர்.இரவீந்திரநாத்)

“ஏகாதிபத்தியத்தையும் முதலாளித்துவத்தையும் வெற்றி கொண்டு ,சோசலிசத்தை கட்டியமைக்க, தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள, இந்தியத் தொழிலாளர்கள், விவசாயிகள், உழைக்கும் மக்கள், இளைஞர்கள், மாணவர்கள், ஆண்கள் ,பெண்கள் ,அறிவுஜீவிகள் ஆகியோரின் அரசியல் கட்சியே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியாகும்.

நானும் ஹிஸ்புல்லாஹ்வும்..!

(Slm Hanifa)


1989 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஹிஸ்புல்லாஹ் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகத் தேர்தலில் குதிக்கிறார். அவரைத் தலைவர் அஷ்ரப் அவர்களிடம் நானே அறிமுகம் செய்து வைக்கிறேன்.

கதிர் வீச்சும் தவளைகளும்

(Ramasubramanian Subbiah)

கதிர்வீச்சும், தவளைகளின் பரிணாம மாற்றமும் :

“ஆய்வாளர்கள், செர்னோபில் கதிர்வீச்சு மண்டலத்தில் பரந்துள்ள, 12 வேவ்வேறு இனப்பெருக்கக் குட்டைகளில் (breeding zones) வாழும் 200 ஆண் தவளைகளைப் பிடித்து ஆய்வுசெய்தனர். கதிர்வீச்சு மண்டலத்திற்கு வெளியில் வசிக்கும் தவளைகளை ஒப்பிடும்போது, கதிர்வீச்சு மண்டலத்தில் ஆய்வுக்கு உட்படுத்திய தவளைகளில் 44 விழுக்காடு தவளைகள் கருமை நிறம்கொண்டவையாகக் காணப்பட்டன.

செர்னோபில் தடைசெய்யப்பட்ட மண்டலத்தில், தவளைகள் அப்படி நிறம் மாறியதற்கு ஒரே ஒரு விளக்கம்தான் இருக்கமுடியும் என்று ஆய்வுக்குழுவினர் கருதுகின்றனர். அதாவது, விபத்து நேர்ந்த பொழுதில், அங்கு நிலவிய மிகமிக அதிகமான கதிர்வீச்சு அளவை எதிர்கொள்ளவே, தவளைகளின் தோல் நிறங்கள் அப்படி கருமை நிறத்திற்கு மாறியிருக்கவேண்டும் என்று ஆய்வுக்குழுவினர் கூறுகின்றனர்.

செர்னோபில் தவளைகளின் தோல்நிறம் கருமைக்கு மாறி, கதிர்வீச்சு விளைவிக்கும் பேரழிவுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொண்டது என்பது, நம் காலத்தில் நிகழ்ந்த பரிணாம மாற்றமே (evolution) என்று ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்

இந்திய பொருளாதாரம் 2023 – துள்ளிக் குதிக்கும் மீன்வளத் துறை

(பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி)

இந்தியாவுக்கு இயற்கை தந்த கொடை -கிழக்கிலும் மேற்கிலும் நீண்டுள்ள கடற்கரை.மீன்வளத்தை நம்பி சுமார் 2.8 கோடி பேரின் வாழ்வாதாரம் உள்ளது. 2014-15-ல் இருந்து, மீன்வளம் சராசரியாக 10.87% வளர்ச்சி கண்டு வருகிறது. 2019-20 நிதியாண்டில் 141.6 லட்சம் டன் மீன்கள் பிடிக் கப்பட்டுள்ளன.

பெரும் பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் – நிதி இல்லாமல் அரசு துறைகள், ரயில்வே தவிப்பு

பாகிஸ்தானின் லாகூர் நகர சந்தையில் நேற்று பொருட்களை வாங்க குவிந்த மக்கள். அங்கு, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதையடுத்து மின்சாரத்தை சேமிக்கும் வகையில் ஷாப்பிங் மால்கள் மற்றும் சந்தைகளை இரவு 8.30 மணிக்குள் மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அடுத்த இன்னிங்ஸுக்கு தயாராகும் மலையாள சினிமா: 2023-ல் எதிர்பார்ப்பைக் கூட்டும் படங்கள்

மலையாள சினிமா இந்த ஆண்டு தனது அடுத்த இன்னிங்ஸை களமாட தயாராகி வருகிறது. அந்த வகையில் மல்லுவுட்டில் எதிர்பார்க்கப்படும் படங்களில் பட்டியலைப் பார்ப்போம். இந்த ஆண்டு பான் இந்தியா, ஃபான்டஸி, 3டி என தனது புதுமுகத்தை அழுத்தமாக பதிவு செய்ய காத்திருக்கிறது மலையாள திரையுலகம்.

சுமார் 500 இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் வேலை

அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் இணைந்து, அமெரிக்காவில் உள்ள இலங்கையர்களுக்கு 550 வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தர முடிந்ததாக அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிக்கையொன்றில் அறிவித்துள்ளது.