இவர் யார் தெரியுமா?

வடக்கு கானாவைச் சேர்ந்த 29 வயதான  ‘சுலைமானா அப்துல் சமத்‘ உலகிலேயே உயரமான மனிதனாக அடையாளங்காணப்பட்டுள்ளார். ஊர்  மக்களால் ‘அவுச்சி‘ என அழைக்கப்படும் இவர் 9 அடி 6 அங்குலம்  (2.89 மீற்றர்) உயரம்  இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13,575 கி.மீ பறந்து கின்னஸ் சாதனை

பார்-டெயில் காட்விட் என்ற பறவை அலாஸ்காவிலிருந்து அஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவுக்கு 8,435 (13,575 கிலோ மீற்றர்) மைல் இடைவிடாமல் பறந்து சாதனை படைத்துள்ளது.

பஸ்களை கையளித்தது இந்தியா

”இலங்கையின் அசைவியக்கத்திற்கும் வாய்ப்புகளுக்கும் ஆதரவளித்தல்” எனும் கருப்பொருளின் கீழ் இலங்கை போக்குவரத்துச் சபையின் பாவனைக்காக 75 பஸ்கள் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்  பந்துல குணவர்தனவிடம் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே கையளித்தார்.  இலங்கையின் பொதுப் போக்குவரத்து உட்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்காக இந்திய உதவின்கீழ் 500 பஸ்கள் இலங்கைக்கு விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

18ஆம் வளைவு பகுதியில் மண்மேடு சரிந்தது

இன்று (8​) காலை மஹியங்கனை வீதியின் 18ஆம் வளைவுப் பகுதியில் பாரிய மண்மேடு சரிந்து விழுந்ததால் குறித்த வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு – வடக்கு ரயில் சேவை இடைநிறுத்தம்

கடந்த 70 வருடங்களாக அபிவிருத்தி செய்யப்படாத மஹவ – ஓமந்தை வரையிலான ரயில் பாதை அபிவிருத்திப் பணிகள் இன்று (08) ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

1979.

(Rathan Chandrasekar)

பொங்கல் திருநாளுக்குப்
பத்து நாள்களே இருக்கின்றன.
அப்போது –
அரசியல் எதிரிகளால்
படுகொலை செய்யப்படுகிறார்
நாடாளுமன்ற உறுப்பினரான
அந்த மக்கள் தலைவர்.
சொன்னால் இப்போதும்
நம்பமாட்டீர்கள்,
துயரில் ஆழ்ந்திருந்த
கீழத்தஞ்சை மாவட்டத்தின்
பெருவாரியான மக்கள்
பொங்கல் விழாவைக்
கொண்டாடாமல் தவிர்த்து,
அந்தத் தலைவனுக்கு
நெஞ்சார்ந்த இரங்கலைத்
தெரிவித்துக்கொண்டார்கள்.
பத்தாண்டுகள் ஊராட்சி மன்றத்தின்
தலைவராக பொறுப்பு வகித்தபோது –
அவர் வாழ்ந்த இடம்
ஒரு எளிய குடிசை வீடு.
பத்தாண்டுகள் ஊராட்சி ஒன்றியப்
பெருந்தலைவராக பதவி வகித்தபோதும்
அவர் வாழ்ந்த இடம்
அதே குடிசை வீடு.
பின்னாளில் –
நாடாளுமன்ற உறுப்பினராக
செயலாற்றிய காலத்திலும்
அவர் வாழ்ந்தது
அதே குடிசை வீட்டில்தான் !
இந்தியாவின்
543 நாடாளுமன்ற உறுப்பினர்களில்
குடிசையில் வாழ்ந்த ஒரே எம்.பி !
தன் சொந்த சேமிப்புக்கென
ஒரு வங்கிக்கணக்கும்கூட இல்லாத
ஒரே எம்.பி.யும்
இவராகத்தான் இருந்திருக்க முடியும்!
நம்புவதற்குக்கூட இப்போது
கடினமாகத்தான் இருக்கிறது இல்லையா!
‘அட அப்படியா;
நம் மாநிலத்தில் இவ்விதம் ஒருவர் வாழ்ந்தாரா!!’
என வியக்கும் பல வரலாற்று நிகழ்வுகளை
நிகழ்த்திக் காட்டிச் சென்ற தோழர்.
இன்று-
ஜனவரி 6
நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியின்
இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்
எஸ்.ஜி.முருகைய்யன்
அரசியல் எதிரிகளால்
படுகொலை செய்யப்பட்ட நாள்.

எஸ்.எல்.எம்.ஹனிபா பச்சோந்தியான கதை தொடர்2..

மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மீது பின்வந்த காலங்களில் எத்தனை விமர்சனங்கள் எழுந்தாலும் அவரது மகத்தான ஆளுமையும் மகோன்னதமான பங்களிப்புகளும் வரலாற்றில் ஒருபோதும் இருட்டடிப்புச் செய்ய முடியாதவை.

உண்மை உறங்குகிறது!

(Maniam Shanmugam)

இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அனைவரும் அறிந்த ஒன்று. அதே நேரத்தில் காலத்துக்காலம் உருவான தமிழ் தலைமைகள் தமிழ் மக்களின் விடிவுக்காகப் போராடுவதாகச் சொல்லிக் கொண்டு முதலில் ‘அகிம்சை’ வழியிலும் பின்னர் ஆயுதப் போராட்ட வழியிலும் போராடியும் எவ்வித விடிவும் தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லை. அழிவைத்தான் கொண்டு வந்தார்கள்.

விரைவில் ரணிலும் ஓடுவார்…

மிக மோசமான முறையில் ஆட்சியைக் கொண்டு செல்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. கோட்டாபயவை போன்று ரணிலும் விரைவில் ஓடுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு

யாழ். மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளதாக இன்று வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வியடைந்த நிலையில்,  வி.மணிவண்ணன் முதல்வர் பதவியை துறந்தார்.