தங்கத்தைப் போலவே மதிப்புமிக்கதாகக் கருதப்படும் அருமண் மூலப்பொருட்கள் ஸ்வீடனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை அந்தப் பொருட்களுக்காக ஐரோப்பா சீனாவைச் சார்ந்திருப்பதன் முடிவின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்று ஹொங்கொங் போஸ்ட் தெரிவித்துள்ளது.
Month: February 2023
பயங்கரவாதமும் பாகிஸ்தானின் எதிா்காலமும்
பத்மநாபா படுகொலை
(Bala R Ganesh)
இந்த வருடத்தின் முதல் வாசிப்பு, இதற்கு முன்பே இந்திர நீலம் சிறுகதைத் தொகுப்பை எடுத்துவிட்டாலும் வரலாறு, கட்டுரைத் தொகுப்புகளின் மீதிருக்கும் மோகம் எனக்கு வடிவதேயில்லை. இருந்த ஒரு விடுமுறை நாளில் சிறுகதையா, வரலாறா என்னும்பொழுது, இந்திர நீலம் என்னை இறுக்கிக் கட்டிப் போட்டிருந்தது. ஆனால் அதை மீறி ஸ்டீபன் ஹாக்கிங்கும், பத்மநாபாவும் வா வா என்றார்கள். ஓடிப்போய் பத்மநாபாவைத் தழுவிக் கொண்டேன்.
13உம் இனவாதமும்
(என்.கே அஷோக்பரன்)
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தின் மீதான விவாதத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் அல்லது 13+ இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்று அறுதியிட்டு ஜே.வி.பியின் மிக நீண்டகால நிலைப்பாட்டை மீள வலியுறுத்திக் கருத்துரைத்திருந்தார்.
பிரபாகரன் உயிரிழந்து விட்டதாக இராணுவம் அறிவிப்பு
2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் உயிரிழந்து விட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. மேலும், இவர் உயிரிழந்தமைக்கான ஆதாரம் தம்வசம் உள்ளதாக இலங்கை இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார். இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நலமுடன் உள்ளார் என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் கருத்து தெரிவித்திருந்த நிலையில், இந்த தகவலை இலங்கை இராணுவம் வெளியிட்டுள்ளது.
உயிருடன் பிரபாகரன்? வைகோ வெளியிட்ட முக்கிய தகவல்
பிரபாகரன் நலமுடன் இருந்தால் மகிழ்ச்சியே என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். “ஈழ விடுதலைப் போர்க்களத்தில் பிரபாகரனோடு களத்தில் நின்ற போராளிகள் சிலர் இன்னமும் உலகின் பல நாடுகளில் இருக்கின்றனர். என்னிடம் தொடர்பில் இருக்கும் அத்தகைய போராளிகள் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள செய்தியை உறுதிப்படுத்தவில்லை” என்றார் வைகோ. தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்று பழ.நெடுமாறன் தனக்கு வந்தத் தகவலை உலகத் தமிழர்களுக்கு இன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்திலிருந்து அறிவிப்பாக வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
துருக்கி மக்களுக்கு இலங்கையின் நன்கொடை
நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்கு இலங்கை தேயிலை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. தேயிலைத் தொகை துருக்கிக்கான தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட தேயிலையே துருக்கி மக்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம், வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை தேயிலைச் சபை ஆகியன இந்த நன்கொடைக்கான செயற்பாடுகளை ஒருங்கிணைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கி நிலநடுக்கம்: 28 ஆயிரத்தை கடந்த உயிரிழப்புகள்
துருக்கி மற்றும் சிரியாவில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (12) வரை 28,000ஐ கடந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பாரிய நில அதிர்வை தொடர்ந்து தெற்கு துருக்கியில் முன்னெடுக்கப்பட்ட வரும் மீட்பு நடவடிக்கைகளின் போது மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்ற போதிலும் பலர் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. (