யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அவசர அழைப்பு

தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையிலும் பொருளாதார பின்னடைவு நேரத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் இரண்டாவது தடவையாக தேவையில்லை என கூறி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றுக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

“நாட்டை விட்டுச் செல்வோர் மீண்டும் திரும்பி வர வேண்டாம்” டயனா

இக்கட்டான காலங்களில் மக்களை நிர்க்கதிக்குள்ளாக்கிவிட்டு நாட்டை விட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்கள் எவரேனும் இருந்தால் அவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பி வர வேண்டாம் என டயனா கமகே தெரிவித்துள்ளார்.

வீணாக கடலுடன் கலக்கும் நீர்

முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு குளத்தை புனரமைப்பதற்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இக்குளத்தின் கீழான விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லெப்பா ஸ்வெடோஸரா ராடிக் .

(Rathan Chandrasekar)

லெப்பா ஸ்வெடோஸரா ராடிக் .
Lepa Svetozara Radic.
1925 டிசம்பர் 19இல் யுகோஸ்லாவியாவின்
கஸ்னிகா கிராமத்தில் பிறந்த சுட்டிப்பெண்.
படிப்பிலும் கெட்டி .

துருக்கி நிலநடுக்கத்தை முன்பே உணர்த்திய பறவைகள்

துருக்கி நாட்டில் திங்கட்கிழமை அதிகாலையில் ஏற்படப்போகும் மிகப்பெரிய இயற்கை பேரழிவினை பறவைகள் கூட்டம் முன்னதாகவே உணர்த்தியுள்ளன.

அலையெனத் திரண்ட தமிழ்மக்கள்…

உரிமைகளுக்காக மட்டக்களப்பில் அலையெனத் திரண்ட வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள்.

கடந்த 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம், தமிழர்களுக்கு கரிநாள் என்ற தொனிப்பொருளிலும், தமிழர்களுக்கான தீர்வு விடயங்களை முன்னிறுத்தியும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல சிவில் அமைப்புகள் இணைந்து வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

55 அலுவலகங்களை மூட அரசாங்கம் அதிரடி தீர்மானம்

அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 55 திட்ட அலுவலகங்களை மூட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்

சங்கத் தமிழ்! தங்கத் தமிழ்!!

இந்தியாவிலேயே எழுத்துக்கள் முதன்முதலில் தோன்றிய, கல்வி அறிவினுடைய தலையாய நிலமாக விளங்கிய ஒரு மாநிலத்தில் நாம் இருக்கிறோம். 2 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பே அந்த அளவிற்கு கல்வி அறிவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கியது. 28 கி.மீ சுற்றளவிற்குள் 20 இடத்தில் 2 ஆயிரம் வருடத்திற்கு முன்பு எழுதப்பட்ட எழுத்துக்கள் இருக்கின்ற ஒரே நகரம் உலகத்திலேயே மதுரை என்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய ஒன்றாகும்.

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் – 13: ஜப்பானில் அதிவலதுசாரித்துவத்தின் எழுச்சி

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, 2021 ஜூலை எட்டாம் திகதி, ஜப்பானிய மேலவைத் தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் நடைபெற்ற அரசியல் பிரசார நிகழ்வில், வீதியில் உரையாற்றிக் கொண்டிருந்த போது சுடப்பட்டு இறந்தார். இது ஜப்பானில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இன்றுவரை, இக்கொலைக்கான காரணங்கள் குறித்து பெரிதாகப் பேசப்படவில்லை. 

அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகிறது

அரசியலமைப்பு பேரவை மூன்றாவது முறையாக இன்று கூடவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் குறித்த கூட்டம் இன்று (06) பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கடந்த மாதம் 25ஆம் மற்றும் 30 ஆம் திகதிகளில் அரசியலமைப்பு பேரவை கூடிய போது, பேரவையின் ஆணைக்குழு சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் முறை குறித்து கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.