தமிழர்களுக்கான மரணப் பொதியே ’13’

இந்தியா தனது நலனுக்காக இலங்கையுடன் சேர்ந்து தமிழ் மக்கள் மீது திணித்த கூட்டுச் சதியே 13 ஆவது திருத்தச்சட்டம் என்றும் இது தமிழர்களுக்கு சவக்குழி, மரண பொதி என்றும் தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்லவராசா கஜேந்திரன் இதை நாம் முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்தார்.

காணி விடுவிப்பு குறித்து பலாலி மக்கள் கவலை

பலாலியில் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும் தங்களுக்கு எந்த வாழ்வாதாரமும் இல்லை என்றும் சந்தோஷமும் இல்லை என்றும் தாங்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் பலாலி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பாரம்பரிய நெல்லினங்கள் அறுவடை

மட்டக்களப்பு மாவட்டம் விவசாயத் திணைக்கள விரிவாக்கல் பிரிவின் பழுகாமம் விவசாய விரிவாக்கல் நிலையத்தின் கீழுள்ள களுமுந்தன்வெளிக் கிராமத்தில் செய்கை பண்ணப்பட்டிருந்த பாரம்பரிய நெல் மற்றும் உபஉணவு பயிற்செய்கை அறுவடை விழா, விவசாயப் போதனாசிரியர் பரமேஸ்வரன் சகாப்தனின் ஒழுங்கமைப்பில் வியாழக்கிழமை(02) நடைபெற்றது.

துருக்கியில் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்த 9 இலங்கையர்கள்

துருக்கியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருப்பதாக நம்பப்படும் ஒன்பது இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த 9 பேரில் 8 பேர்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். எனினும், இடிந்து வீழ்ந்த கட்டடத்தில் வசித்த 9 ஆவது நபர் சம்பவம் இடம்பெற்ற போது அங்கு இருக்கவில்லை என்று கூறப்படுகின்றது. மேலும் அவர் தொடர்பில் இதுவரை தொடர்பு கொள்ளப்படவில்லை என துருக்கிக்கான இலங்கை தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி இடமாக உருவாகிறது நெதர்லாந்து

பெட்ரோலியப் பொருட்கள், இலத்திரனியல் (எலக்ட்ரானிக்) பொருட்கள், இரசாயனங்கள் மற்றும் அலுமினியப் பொருட்கள் போன்ற பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்ததன் காரணமாக, இந்த நிதியாண்டில் ஏப்ரல்-டிசெம்பர் மாதங்களில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்களுக்கு அடுத்தபடியாக நெதர்லாந்து இந்தியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி இடமாக உருவெடுத்துள்ளது.

வாசித்ததில் மனதை நெகிழச் செய்தது..!

கலெக்டர் ஏன் மேக்கப் போடவில்லை…?
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீமதி. ராணி சோயாமோய் கல்லூரி மாணவர்களுடன் உரையாடுகிறார்.
கைக்கடிகாரத்தைத் தவிர வேறு எந்த நகையும் அணியவில்லை.

சங்கராபரண நாயகன் கே. விஸ்வநாத் இன் நினைவலைகள்….

(சாகரன்)

‘இந்தியக் கலாச்சாரத்தின் அடையாளமான கே. விஸ்வநாத் என்ற கலைஞன்’

ஒரு புறம் கடவுள் அவதாரங்களாக என்.டி ராமராவ் போன்றவர்கள் நடித்து ஆந்திராவின் முதல்வர் வரை செல்ல தம்மை வளர்த்துக் கொண்ட தெலுங்கு சினிமா உலகம்.

சுமந்திரனை வளர்க்கும் புதிய கூட்டணி

(புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் எம்.ஏ சுமந்திரன் நுழைந்தது முதல், கூட்டமைப்பை பிளவுபடுத்தும் சதித்திட்டங்களில் ‘ஆமை’ போன்று ஈடுபட்டதாக, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி (ஜ.த.தே.கூ – DTNA)) குற்றஞ்சாட்டுகின்றது. 

பர்வேஸ் முஷாரப் டுபாயில் காலமானார்

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் உடல்நலக்குறைவால் டுபாயில் காலமானார். அவருக்கு வயது 79 ஆகும். நீண்ட காலமாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

4 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தஞ்சம்

யாழ்ப்பாணம் – புங்குடுதீவை சேர்ந்த  ஜெய பரமேஸ்வரன் (43), அவரது மனைவி மாலினி தேவி (43) மற்றும் அவரது 12 வயது மகள், 7 வயது மகன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நேற்று (3) மாலை படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அருகே உள்ள ஒத்தப்பட்டி தெற்கு கடற்கரைக்கு நள்ளிரவு வந்திறங்கி கடற்கரை அருகே உள்ள மீனவர் குடிசையில் தஞ்சமடைந்தனர்.