619 கைதிகளுக்கு விடுதலை

75 ஆம் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகள் 588 பேரும், தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 பேருக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்ற தண்டனை விதிக்கப்பட்டு, புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது

Clean and Green city Srilanka நாளை ஆரம்பம்

பசுமையான இலங்கை (Clean and Green city Srilanka ) எனும் தொணிப்பொருளில் நகர தூய்மையாக்கல் வேலைத்திட்டம் இன்றிலிருந்து ஒருவாரத்துக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி விடுத்துள்ள சுதந்திர தின செய்தி

75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நீண்ட காலத்திற்குப்பின் தமிழ் மக்களிக் காணிகள் விடுவிப்பு

யாழ். தெல்லிப்பழை பிரதேச செயலா் பிாிவிற்குட்பட்ட வலி,வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திலிருந்து சுமாா் 108 ஏக்கா் காணி நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது. 

முடங்கியது யாழ்ப்பாணம்

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு ஆதரவாக யாழ்.மாட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

மஹிந்தவை மீண்டும் பிரதமராக்க முயற்சி

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது தொடர்பில் ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்புப்பிளவும் தமிழர் அரசியலும்

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் மீண்டும் ஒரு பிளவு தோன்றியுள்ளது. இறுதியாக மூன்று கட்சிகள் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளாக இருந்தன. தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) என்பனவே அவை. இப்பொழுது மூன்று கட்சிகளும் தனித்தனியாகப் பிரிந்துவிட்டன, அல்லது பிரிக்கப்பட்டுவிட்டன.

வானவில் 145

2023 ஆம் ஆண்டு, தை மாதத்திற்குரிய வானவில்(இதழ் 145) வெளிவந்துவிட்டது. இதனை கீழேயுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம்.

https://manikkural.files.wordpress.com/2023/01/vaanavil-145_2023.pdf

அணு ஆயுதப் போரின் வரலாறு

“90 வினாடிகள் முதல் நள்ளிரவு வரை”: பென்டகனின் 1945 “டூம்ஸ்டே புளூபிரிண்ட்” “வரைபடத்திலிருந்து சோவியத் யூனியனைத் துடைக்க”

ஏழாவது லத்தீன் அமெரிக்கா கரீபியன் செலாக் உச்சி மாநாடு – ஏய்ப்பு மற்றும் யதார்த்தத்திற்கு இடையில்

அர்ஜென்டினாவில் லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் மாநிலங்களின் சமூகத்தின் ஏழாவது உச்சிமாநாட்டின் முக்கிய சாதனை, அப்பகுதியின் அனைத்து மக்களுக்கும் ஒரு பெரிய தேசத்தின் பார்வையை உயிர்ப்புடன் வைத்திருப்பது தவிர்க்க முடியாததாக இருக்கலாம். CELAC இன் நிறுவனர்களின் மகத்தான சுறுசுறுப்பு மற்றும் நேர்மையுடன் ஒப்பிடும்போது, ​​உச்சிமாநாட்டின் இறுதி அறிக்கை ஒரு சாதுவான, சாதாரணமான ஏய்ப்பு மற்றும் வெற்று அபிலாஷைகளை வெளிப்படுத்துகிறது.