ஜி-20 இல் ஒலிக்கம் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்

தற்போது G20 தலைவர் பதவியை வகிக்கும் இந்தியா, குறிப்பாக பசுமை மேம்பாடு, காலநிலை நிதி மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) மற்றும் உலக அமைதி ஆகியவற்றில் முன்னேற்றத்தை துரிதப்படுத்துதல் ஆகிய துறைகளில் உலக நிலைத்தன்மையை நோக்கி ஈர்க்கக்கூடிய அளவு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் எச்சரிக்கை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம் (09) முன்னெடுக்கப்பட்டது.

பால்நிலை சமத்துவம் மறைந்து கொண்டிருக்கிறது

பால்நிலை சமத்துவமானது எமது கண் முன்னே மறைந்து கொண்டிருக்கிறது. மேலும் ஐ.நா பெண்கள் அமைப்பின் மதிப்பீட்டுப் படி பால்நிலை சமத்துவம் இப்போதைய உலகிலிருந்து 300 ஆண்டுகள் தொலைவில் இருக்கின்றது என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அன்டோனியோ கட்டர்ஸ், ஜெனிவாவிலுள்ள ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கடந்த திங்கட்கிழமை சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்

யாழ். மாநகர முதல்வர் தெரிவு ஒத்தி வைப்பு

யாழ். மாநகர முதல்வர் தெரிவு கோரம் இல்லாததால் மீளவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநகர சபையின் புதிய முதல்வர் தெரிவு உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. எனினும் சபை ஆரம்பமாகிய போது சபையில் கோரம் இல்லாததால் சபையினை அரைமணிநேரம் ஒத்தி வைப்பதாக ஆணையாளர் அறிவித்தார். இதனால் மீண்டும் முதல்வர் தெரிவு இன்னும் சில மணிநேரங்களில் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு வாரத்தில் கிடுகிடுவென சரிந்தது தங்கத்தின் விலை

அமெரிக்க டொலரின் பெறுமதி குறைந்துள்ளதன் காரணமாக இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை தெரிவித்துள்ளது. இலங்கையில் ஒரு வாரத்தில் தங்கம் ஒரு பவுனின் விலை சுமார் 39,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக விலைமதிப்பற்ற உலோகங்கள் பகுப்பாய்வு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார தெரிவித்துள்ளார்.

மேற்குலகின் “மோசமானதொரு கனவு” நனவாகின்றது

மார்ச் 20ந் திகதியிலிருந்து 22ந் திகதி வரை ரஷ்யாவிற்கு விஜயம் செய்து திரும்பியிருக்கிறார், சீனாவின் ஜனாதிபதி ஸி ஜின்பிங் (Xi Jinping). மார்ச் 10ந் திகதி மூன்றாவது முறையாக சீனாவின் ஜனாதிபதியாக பதவியேற்ற ஸி ஜின்பிங், தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை ரஷ்யாவிற்கே மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஒருவருடத்தைக் கடந்துள்ள ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்துள்ள விசேட இராணுவ நடவடிக்கையின் பின்னணியில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது செய்ய உத்தரவிட்ட நிலையில், அமெரிக்காவின் சில வங்கிகள் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் சூழலில் ஸி ஜின்பிங்கின் ரஷ்ய விஜயம் உலகரங்கில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.

IMF உடன்படிக்கைக்கு இலங்கையை ஆதரித்த முதல் நாடு இந்தியா

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்தக்கட்ட கூட்டம் மார் மாதம் 20ஆம் திகதியன்று நடத்தப்படவுள்ளது. அந்தக்கூட்டத்தின் போது, இலங்கைக்கு சாதகமான பதில் கிடைக்குமென பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வ​தேச நாணய நிதியத்தினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பலவற்றை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதால் சாதாகமான சமிக்ஞை கிடைத்துள்ளது.

மீண்டும் மாணவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகம்

கண்டி – கொழும்பு பிரதான வீதியின் களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்தது

இன்று (09) முதல் 7 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறைக்கப்பட்ட பொருட்களின் புதிய விலைகள் பின்வருமாறு.

குரங்குப் பணியாளர்களால் சரியும் சந்தை

குரங்குகளை வேலைக்குப் பயன்படுத்துவதால் உலகின் முக்கிய தென்னை சார் உற்பத்தி விநியோகஸ்த்தரான தாய்லாந்திடமிருந்து உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதை பெரும்பாலான  சர்வதேச நிறுவனங்கள் தவிர்த்து வரும் நிலையில் , தனது தென்னை சார் உற்பத்தி ஏற்றுமதியை விரிவுபடுத்தக் கூடிய சந்தர்ப்பத்தை இலங்கை பெற முடியும்.