
Month: March 2023
மலையகம் 200
ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு
(புருஜோத்தமன் தங்கமயில்)
இலங்கை இனியும் வங்குரோத்து அடைந்த நாடல்ல என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கிறார். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஏழு பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுக்கொள்ளவதற்கான அனுமதி, திங்கட்கிழமை (20) கிடைத்திருக்கின்ற நிலையில், ரணில் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கையை காப்பாற்றுமா?
(எம்.எஸ்.எம். ஐயூப்)

இலங்கைக்கு நான்கு வருடங்களுக்கு 2.9 பில்லியன் டொலர் கடன் கொடுப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் கடந்த வருடம் செப்டெம்பர் முதலாம் திகதி செய்து கொள்ளப்பட்ட அதிகாரிகள் மட்ட இணக்கப்பாட்டுக்கு, அந்நிதியத்தின் நிறைவேற்றுச் சபை திங்கட்கிழமை (20) ஒப்புதல் வழங்கியுள்ளது.
பால் தேநீரின் விலையில் ஏற்பட்ட மாற்றம்
பால் தேநீர் கோப்பை ஒன்றின் விலையை நாளை முதல் 10 ரூபாவால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
பதவிக்காக தவமிருக்கும் SLPP உறுப்பினர்கள்
நீண்ட காலமாக அமைச்சுப் பதவிகளுக்காகக் காத்திருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழு தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. இவர்களுக்கான அமைச்சுப் பதவிகள் தாமதமானால், அரசுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் முடிவெடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.