மன்னாரில் மாபெரும் கண்டன போராட்டம்

வடக்கு கடற்பகுதியை இந்திய மீனவர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதையும், இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையையும் கண்டித்து நேற்று (23) மன்னாரில் மாபெரும்  கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ராகுலுக்கு ஆப்பு; தேர்தலில் போட்டியிட முடியாது

எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது இந்திய பிரதமர் நரேந்தி மோடியின் பெயரை பயன்படுத்தி பேசியது சர்ச்சையானதை தொடர்ந்து அவருக்கு குஜராத் சூரத் நீதிமன்றம் நேற்று 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது.

அமெரிக்கா திவாலாகின்றதா?

(Maniam Shanmugam)

அமெரிக்காவில் செயல்பட்டு வந்த 64 முக்கியமான கொம்பனிகள் ஏனைய நாடுகளுக்கு விற்கப்பட்டுள்ளன. அவற்றில் அரைவாசிக்கு மேற்பட்ட (45 வரை) கொம்பனிகளை சீனா வாங்கியுள்ளது.
விற்கப்பட்ட கொம்பனிகளின் பெயர்களும், அவற்றை வாங்கிய நாடுகளின் விபரமும் வருமாறு:
The American Companies That Aren’t Actually American Anymore

பொன்னாங்காணி பறித்தவர் முதலை தாக்குதலில் பலி

மாவடிப்பள்ளி ஆற்றின் ஓரத்தில் பொன்னாங்காணி கீரையை பறித்துக் கொண்டிருந்த ஒருவர், முதலை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். 

இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வலுப்பெற்றது

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று மேலும் வலுப்பெற்றுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வௌியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி,  அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 311.26 ரூபாவாகவும், விற்பனை விலை 328.60 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

IMF உடன்படிக்கை பொருளாதாரத்தின் மறுசீரமைப்பு – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டப்படி பாராளுமன்ற அனுமதி தேவையில்லாத போதிலும் அதனை  பாராளுமன்றத்தின் அனுமதியையும் உதவியையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்தார்.

நீர் இன்றி அலையும் உலகு

(சாகரன்)

நீ இன்றி அமையாது உலகு என்றேன்
நீர் இன்றி அமையாது உலகு என்றாய் நீ
நீங்கள் இன்றி அமையாது உலகு என்கின்றார்கள் அவர்கள்

இந்த காதலுக்குள்ளும் அந்த நீர் இல்லாமல் இல்லை.
அதுதான் வாழ்வியல்.

லெபனானாக மாறுகிறதா இலங்கை

(ச.சேகர்)

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவுவது அனைவரும் அறிந்த விடயம். 2022 ஆம் ஆண்டு என்பது நாட்டின் வரலாற்றில் மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடி நிலவிய ஆண்டாக அமைந்திருந்ததுடன், பொது மக்கள் பெரும் துயரங்களை அனுபவித்திருந்தனர். மக்களின் பொறுமை எல்லை கடந்ததன் விளைவாக, நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இராஜினாமா செய்ததோடு, அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கோடாபய ராஜபக்ச பதவியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்.

IMF உறுதிக்குப் பின்னர் இன்று நிகழ்ந்த மாற்றங்கள்

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், அதிரடியான சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதுடன், அறிவிப்புகள் சிலவும் வெளியாகியுள்ளன.

மீண்டும் குறைந்தது தங்கத்தின் விலை

நாட்டில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதன்படி, 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 151,500 ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று தங்கத்தின் விலை சடுதியாக குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது