இராவணன் தன் தாயின் இறுதி கிரிகைகளுக்காக தனது வாள் கொண்டு உருவாக்கியதாக இலக்கியங்களில் சொல்லப்படும் திருகோணமலை கன்னியா ஏழு வெந்நீர் ஊற்றும் பரிபோகும் அபாயத்தில் தொங்கிக்கொண்டிருக்கின்றது.
Month: March 2023
தடையில்லா மின்சாரம் குறித்த தகவல்
தலா 60 ஆயிரம் மெற்றிக் தொன் நிலக்கரியை ஏற்றிய மூன்று நிலக்கரிக் கப்பல்கள் புத்தளத்தை வந்தடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 17,18 மற்றும் 19ஆவது கப்பல்களில் இருந்து நிலக்கரி இறக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சு தடையில்லா மின்சாரம் வழங்குவதை நிலக்கரி இறக்குமதி உறுதி செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் ஸ்டார்ட்அப் பூடானுக்கு நன்மை பயக்கும்: அறிக்கை
பூட்டான்-இந்தியா ஸ்டார்ட்அப் உச்சிமாநாட்டின் மூலம் அனுபவம் வாய்ந்த வணிகர்களிடம் இருந்து கற்றுக்கொள்வதற்கு வளரும் தொழில்முனைவோருக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் இந்தியாவின் வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு பூட்டானுக்கு நன்மை பயக்கும் என்று தி பூட்டான் லைவ் தெரிவித்துள்ளது.
ரூபாய் ஏன் திடீரென மேலே பாய்ந்தது?
(எம்.எஸ்.எம். ஐயூப்)
இது ஆச்சரியம் தான்! ஆனால் உண்மை. நாடு சாதாரண நிலையில் இருந்த கடந்த பல தசாப்தங்களாக, ஐக்கிய அமெரிக்க டொலரோடு ஒப்பீட்டளவில் இலங்கையின் ரூபாயின் பெறுமதி குறைந்த வண்ணமே இருந்தது. ஆனால், இலங்கை வங்குரோத்து அடைந்ததாக நாட்டின் தலைவர்களே அறிவித்ததன் பின்னர், ரூபாயின் பெறுமதி கடந்த சில நாள்களாக தொடர்ச்சியாக அதிகரித்தது.
பொருளாதாரம் 7.8% ஆல் சுருங்கியது
கொடுப்பனவுகளை குறைக்க தீர்மானம்
அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்கிறது
இலங்கை மத்திய வங்கியினால் வியாழக்கிழமை (16) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதத்துக்கு அமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 329 ரூபாய் 02 சதமாகவும் விற்பனை விலை 346ரூபாய் 33 சதமாகவும் பதிவாகியுள்ளது. டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 327 ரூபாய் 59 சதமாகவும் விற்பனை விலை 344ரூபாய் 66 சதமாகவும் புதன்கிழமை (15) பதிவாகி இருந்தது. மார்ச் 1ஆம் திகதிமுதல் அதிகரித்து வந்த ரூபாயின் பெறுமதி மார்ச் 10ஆம் திகதி முதல் குறைந்து வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
ஸ்ரீ ரங்கா கைது
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது செய்யப்பட்டுள்ளார். களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டு சம்பவத்தில் ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து இவரது கைது இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்தும் சரிகிறது ரூபாயின் பெறுமதி
இலங்கை மத்திய வங்கியினால் புதன்கிழமை (15) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களில் அடிப்படையில், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி மேலும் சரிவடைந்துள்ளது. அதற்கிணங்க, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 327 ரூபாய் 59 சதமாகவும் விற்பனை விலை 344ரூபாய் 66 சதமாகவும் பதிவாகியுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள், நேற்று முன்தினத்துடன் (14) ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளன.