மீண்டும் பொது முடக்கம்? அதிர்ச்சியில் மக்கள்

சீனாவின் ‘ஜெஜியாங், ஜின்ஹுவா, ஹாங்சோ, நிங்போ‘ ஆகிய மாகாணங்களில் வசித்து வரும் மக்களிடையே கடந்த சில வாரங்களாக ‘H3N2‘ என்ற வைரஸ் காய்ச்சல் வேகமாகப்  பரவி வருகிறது.

பஸ் கட்டணங்கள் குறையும் சாத்தியம்

ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகராக உயரும் இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் நிலையானதாக இருந்தால் ஜூன் மாதமளவில் பஸ் கட்டணங்கள் மீள் திருத்தப்பட்டு குறைக்கப்படலாம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

4 மாகாணங்களில் வேலை நிறுத்தம்

மேல், மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளையதினம் (13) வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம், ஞாயிற்றுக்கிழமை (12) அறிவித்தது. அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சைகள் தொழிற்சங்க நடவடிக்கை  காரணமாக பாதிக்கப்பட  மாட்டாது என்று செயலாளர் டாக்டர் ஹரித அலுத்கே உறுதியளித்தார்.  மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலைகள், தேசிய புற்றுநோய் நிறுவனம், தேசிய மனநல நிறுவனம், சிறுநீரக சிகிச்சை பிரிவுகள், இராணுவ  வைத்தியசாலைகள் ஆகியவற்றின் நடவடிக்கைகளும் பாதிக்கப்படாது என்றும் அவர் அறிவித்தார்.

எரிபொருள் விலையில் மாற்றம்

டொலர் வீழ்ச்சியால் எரிபொருள் இறக்குமதியில் கிடைக்கும் நிவாரணம் மக்களுக்கும் வழங்கப்படும் என மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதற்கமைய ஏப்ரல் மாதம் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமென தாம் நம்புவதாகவும்  தெரிவித்துள்ளார்.

சிறுபோகத்தில் யூரியா விலை மேலும் குறையும்

10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் யூரியா உரத்தின் விலை எதிர்வரும் சிறு போகத்தில் மேலும் குறைக்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சீன ஜனாதிபதியாக மீண்டும் ஷி ஜின்பிங் தேர்வு!

சீன நாட்டின் ஜனாதிபதியாக ஷி ஜின்பிங்(வயது 69) தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இதுவரை இல்லாத வகையில் கடந்த ஓக்டோபர் மாதம் மூன்றாவது முறையாக ஷி ஜின்பிங் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

59% குடும்பங்கள் உணவின்றி தவிப்பு: அறிக்கை

2022 ஆம் ஆண்டில் குறைந்து வரும் உணவு உற்பத்தி மற்றும் பணவீக்கம் காரணமாக இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐம்பத்தொன்பது (59) வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் தெரியவந்துள்ளது. 

ரூபாவின் பெறுமதி அதிகரிப்புக்கான காரணம் வெளியானது

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதற்கு பல காரணங்கள் இருப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதாரச் செயற்பாட்டின் சில செயற்பாடுகளுடன் அதுவரை டொலர்களை வைத்திருந்த தரப்பினர் அந்த டொலர்களை சந்தையில் விடுவித்தமையும் இந்த நிலைமைக்கு மற்றொரு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இந்த வருட இறுதிக்குள் டொலரின் பெறுமதி மீண்டும் உயரலாம் என ஃபிட்ச் ரேட்டிங்  நிறுவனம் தெரிவித்திருந்த கணிப்பு தொடர்பில் பேராசிரியர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

’’வடக்கின் போர்’’ யாழ். மத்திய கல்லூரி வெற்றி

“வடக்கின் போர்” என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும்  இடையிலான 116 ஆவது போட்டியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 9 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

சீனாவின் புதிய பிரதமராக லி கியாங்

சீனாவில் புதிய பிரதமராக ஷாங்காய் கட்சியின் செயலாளரான லி கியாங் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.  லி கியாங், கடந்த அக்டோபரில் நிலை குழுவில் இணைந்துள்ளார். அவர் தனது சொந்த ஜெஜியாங் மாகாணத்தில் 40 ஆண்டுகளாக அரசியல்வாதியாக செயல்பட்டதுடன், ஜீ ஜின்பிங்கின் செயலாளராகவும் ஆனார். 

சீனாவின் அதிபராக மூன்றாவது முறையாக ஜீ ஜின்பிங் போட்டியின்றி நேற்று தேர்வு செய்யப்பட்டார். 

3 ஆயிரம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற அவர், சீனாவின் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்த நிலையில், சீனாவின் புதிய பிரதமர் நியமனம் மற்றும் அறிவிப்பு அடுத்தடுத்து இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.