ஒழுக்கத்தை மீறிய குழுவுக்கு சிக்கல்

ஒழுக்கக்கேடான அம்சங்கள் அடங்கிய புத்தாண்டு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு புத்தசாசன மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தீர்மானித்துள்ளார்.

நெடுந்தீவில் ஐவர் படுகொலை: வெளிநாட்டவர் காயம்

நெடுந்தீவு இறங்குதுறையை அண்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்கள் மீது இனந்தெரியாதோர் நடத்திய வாள்வெட்டில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மௌன அஞ்சலி செலுத்துங்கள்: ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக, இன்று காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை  பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பணவீக்கம் குறைவடைந்தது

இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 49.2% ஆக குறைவடைந்துள்ளதாக கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையிலான தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 53.6% ஆக பதிவாகியிருந்தது. மேலும் பெப்ரவரி மாதத்தில் 49.0 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் பெப்ரவரி மாதத்தில் 42.3 சதவீதமாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

1,700 இற்கு மேற்பட்ட பப்பாசி மரங்கள் அழிந்தன

வவுனியா வடக்கில் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 1,700 இற்கு மேற்பட்ட பப்பாசி மரங்களும், பயன்தரு ஏனைய மரங்களும் அழிவடைந்துள்ளன என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கடும் வெப்பதற்கு மத்தியில் வவுனியா வடக்கில் நேற்று(20) மாலை திடீரென கடும் காற்றுடன் மழை பெய்துள்ளது.

பர்தா – 2

(MYM SIDDEEK)

பர்தாவுக்கு எதிரான விமர்சனம் இஸ்லாமிய மதத்தை அவமதிப்பதற்கு ஒப்பானதாகும்!

முஸ்லிம் பெண்களைப்பொறுத்தவரையில், பர்தா அணிவது அவர்கள் சார்ந்த சமயத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதனாலேயே மதம் மாறிய புதிய முஸ்லீம் பெண்கள் அனைவருமே தமது இஸ்லாம் மதத்தின் மீதான நம்பிக்கையின் அடையாளங்களில் ஒன்றாகவும் பர்தா அணிகின்றனர்.

யாழ். போட்டி புறா தனுஷ்கோடியில் தஞ்சம்

இலங்கை புறா ஒன்று, கடல் கடந்து தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் தஞ்சம் அடைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் புலித்தேவன் நகரில் உள்ள நகரை சேர்ந்தவர் அரச குமார். இவர் கடந்த 16ஆம் திகதி தனுஷ்கோடியில் இருந்து நாட்டுப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார்.

பொருளாதார உறவை பிணைக்கும் கப்பல் ​சேவை

(Tamil Mirror)

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மீண்டும் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவிருக்கின்றது என்ற செய்தி வெளிவந்தவுடன் பலரது முகங்களிலும் ஒருவகையான மகிழ்ச்சியை காணக்கூடியதாக இருந்தது. எப்படியாவது ஒருதடவை சென்றுவந்துவிடவேண்டும் என்பதே அவர்களது நினைப்பில் இருந்தது.

ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

அவதூறு வழக்கில் குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அவர் எம்.பி. பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டது தொடரும் நிலை உருவாகியுள்ளது.