(Ravindran Pa)
1928 பனிக்காலம். கொலம்பிய நகரமானCiénaga இல் வாழைப்பழ உற்பத்தித் தொழிலாளர்கள் தமது வாழ்வாதார தேவைகளையும், சம்பள உயர்வையும் கோரி பெரும் வேலைநிறுத்தத்தில் இறங்கினார்கள். ஒன்றும் விசேடமான கோரிக்கைகள் அல்ல இவை. இருந்தபோதும் டிசம்பர் 6ம் தேதி அவர்கள் திரண்டிருந்த கூட்டமொன்றில், தொழிற்சங்க தலைவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, கொலம்பிய இராணுவம் பெரும் படுகொலையை நிகழ்த்தியது. இதில் இரண்டாயிரம் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.