ஹட்டனில் ’மலையக மக்கள் சக்தி’ உதயமானது

மலையகத்தின் அரசியல் செயற்பாடுகளில் புதிய அணியாக ‘மலையக மக்கள் சக்தி’ எனும் புதிய அரசியல் கட்சி ஒன்று ஹட்டனில் அங்குராப்பணம் செய்யப்பட்டுள்ளது.

துபாய் நோக்கி சென்ற விமானம் தரையிறங்கியது

சுமார் 15 மணித்தியாலங்கள் தாமதமாக துபாய் நோக்கி புறப்பட்ட ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யூ.எல் 225 விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (08) காலை தரையிறக்கப்பட்டது. 

8 இடங்களில் தேடுதல்; LTTE ஆதரவாளர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) புத்துயிர் அளிக்கும் முயற்சியை அதிகாரிகள்  கொச்சியில் முறியடித்ததை அடுத்து சென்னையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, பர்மா பஜாரில் கடை நடத்தி வரும் முகமது இலியாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலையில் வெடித்தது மோதல்

திருக்கடலூர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இதுவரை 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சம்மாந்துறையில் பதற்றம்; ஒருவர் பலி – மூவர் கைது

பள்ளிவாசல் ஒன்றின்  நிர்வாக தெரிவுக்கான ஆலோசனைக்  கூட்டம்   ஒன்றின் பின் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலியானதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேவேந்திர முனையில் சீனாவின் ரேடார் தளம்?

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் இருப்பு மற்றும் இந்திய கடற்படையின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக, இலங்கையில் ரேடார்  தளத்தை அமைப்பது குறித்து சீனா பரிசீலித்து வருவதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வாடகைக்கு வீடு தேடி வந்த குழுவின் மோசமான செயல்

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நேற்று வீடு வாடகைக்கு தேவை என வீடு ஒன்றிற்குள் உள்நுழைந்த  3 பேர் கொண்ட கொள்ளையர்கள் அங்கு தனிமையில் இருந்த பெண்னை அடித்து தாக்கிவிட்டு, அவரிடமிருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

நேட்டோவில் புதிய நாடுகளின் இணைப்பு புதிய உலக ஒழுங்கை ஏற்படுத்துமா…?

(சாகரன்)


2295 கிலோ மீற்றர் (தரை வழியே 1974 கிலோ மீற்றர் நீர் வழியாக 321 கிலோ மீற்றர்) தூரத்திற்கு ரஷயாவின் எல்லையில் அமெரிக்க நேட்டோ படைகளை நிறுத்தி ரஷ்யாவின் இருப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நேட்டோவுடனான இணைவு வேண்டாம் என்பதை மீறிச் செயற்பட முனைந்ததே உக்ரேன் ரஷ்யா யுத்தம்..

இலங்கைக்கு கிடைத்த 1,413 மில்லியன் டொலர்கள்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கடந்த மாதம் 568.3 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் 1,413.2 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பற்றியெரிந்த பங்காபஜார்; 3,000 கடைகள் சேதம்

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் உள்ள பிரபலமான ஆடைச் சந்தையான பங்காபஜாரில் நேற்று முன்தினம்(04)அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 3,000 கடைகள் தீயில் எரிந்து நாசமாகின.