இந்தியாவின் வட கிழக்கே உள்ள கடைசி மாநிலம் தான் அருணாச்சல பிரதேசம். அந்த மாநிலத்தின் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் எல்லை சீனாவின் எல்லையையொட்டி அமைந்திருக்கிறது. இந்த புவியியல் ரீதியலான சூழலை தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் சீனா, அருணாச்சல பிரதேசத்தின் பெரும்பாலான எல்லைப் பகுதிகளுக்கு உரிமை கொண்டாடி வருகிறது. அருணாச்சல பிரதேசத்தை ‘தென் திபெத்’ என்று அழைத்து வருவதோடு, அருணாச்சலப் பிரதேசத்தின் சுமார் 90,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை தனது பகுதி என்றும் உரிமை கொண்டாடி வருகிறது.
Month: April 2023
‘பிச்சை வேண்டாம் நாயைப் பிடி’
(எம்.எஸ்.எம் ஐயூப்)
சர்வதேச ரீதியாக விமர்சிக்கப்பட்டு வந்த பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக, அரசாங்கம் கொண்டு வரப்போகும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பாக, ஏற்கெனவே தெற்கிலும் வடக்கிலும் சர்வதேச ரீதியாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிலர், தற்போது அமலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பார்க்கிலும், புதிய சட்டம் மோசமானது எனக் கூறுகின்றனர்.
அமைச்சரவையில் டக்ளஸ் அதிருப்தி
வாழைப்பழ நாடுகள் (பகுதி-2)
(Ravindran Pa)
வாழைப்பழம் எல்லோராலும் விரும்பப்படும் பழவகைகளில் ஒன்று என்ற இனிமைக்குப் பின்னால் அது ஒரு அரசியல் ஆயுதமாக எப்படி பாவிக்கப்பட்டது என்ற கசப்பும் உள்ளது. ரெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான Rebecca Cohen சொன்னார், “வாழைப்பழம் ஒரு பழம் என்பதாய்த் தெரிந்தாலும் அது சுற்றுச்சூழல் சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த, மற்றும் சமூக அரசியல் சார்ந்த பிரச்சினைகளையும் அது கொண்டிருக்கிறது. வாழைப்பழ வர்த்தகமானது பொருளாதார ஏகாதிபத்தியம் மற்றும் விவசாயப் பொருளாதார உலகமயமாக்கம் என்பவற்றை அடையாளமாகக் கொண்டுள்ளது.“ என்றார்.
இருபதாம் நூற்றாண்டின் நெருக்கடி
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் – 21:
கடந்தவாரம், இலத்தின் அமெரிக்காவில் அதிவலது தோற்றம் பெற்ற வரலாற்றைப் பார்த்தோம். கொலம்பஸ்ஸின் வருகையுடன் இலத்தின் அமெரிக்காவின் முகம் மாறத் தொடங்கியது. பிரேஸிலும் இன்னும் சில சிறிய தீவுகளும் தவிர்ந்த ஏனைய பகுதிகள் ஸ்பெயினின் கொலனிகளாகின. அங்கு குடியேறிய ஸ்பானியர்கள் புதிய அதிகாரம் மிக்க இனக்குழுவாக உருவெடுத்தார்கள். அவர்கள் தங்களை 16/17ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் செல்வாக்குச் செலுத்திய ஐபீரிய ஏகாதிபத்தியத்தின் வழித்தோன்றல்களாகக் கருதினார்கள். கிறிஸ்தவத்தையும், நிறவெறியையும் தமது ஆயுதமாக்கினர்.
வாழைப்பழ நாடுகள் (பகுதி-1)
(Ravindran Pa)
2021 கணக்கெடுப்பின்படி வாழைப்பழ உற்பத்தியானது,
- இந்தியா – 33 மில்லியன் தொன்
- சீனா – 11.7 மில்லியன் தொன்
- இந்தோனேசியா – 8.7 மில்லியன் தொன்
- பிரேசில் – 6.8 மில்லியன் தொன்
- எக்குவடோர் – 6.6 மில்லியன் தொன்
- பிலிப்பைன் – 5.9 மில்லியன் தொன்
- அங்கோலா – 4.3 மில்லியன் தொன்
- குவாத்தமாலா – 4.2 மில்லியன் தொன்
- தன்சானியா – 3.5 மில்லியன் தொன்
- கொஸ்ரா றீக்கா – 2.5 மில்லியன் தொன்
என்ற கணக்கில் விளைச்சலாகிறது.
இந்தியாவில் 800’000 ஹெக்ரர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. மகாராஸ்ரா, தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், ஆந்திரப் பிரதேஷ், மற்றும் அசாம் பிரதேசங்களில் இவை பெருமளவில் பயிரிடப்படுகிறது.
இருந்தபோதும் இந் நாடுகளில் பலவும் உள்நாட்டுச் சந்தைகளுக்கான தேவைகளையே மையமாகக் கொண்டிருக்கின்றன. உலகின் முன்னணி ஏற்றுமதி நாடுகளாக எக்குவடோர் 24 சதவீதமும், கொஸ்ரா றீக்கா 12.9 சதவீதமும், பிலிப்பைன்ஸ் 7.8 சதவீதமும், கொலம்பியா 7 சதவீதமும், குவாத்தமாலா 6.5 சதவீதமும் என்ற அடிப்படையில் இருக்கின்றன. 5 பெரும் கம்பனிகள் Dole, Del Monte, Chiquita, Fyffes and Noboa உலக சந்தையின் 80 வீதமான வாழைப்பழ ஏற்றுமதியை கட்டுப்படுத்துகின்றன. வாழைப்பழத்தின் அரசியலை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
இணைந்த வடக்குகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜபெருமாளின் ஊடகவியலாளர் சந்திப்பு.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
இந்த வருடத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக இலங்கைக்கு 100,000 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார். மார்ச் மாதத்தில் நாட்டுக்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 125,495 ஆகும். ரஷ்யா, இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சஜித் அணியில் பிளவு: ரணிலுடன் மூவர் இணைவர்
எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. அவ்வணியைச் சேர்ந்த மூவர், ஜனாதிபதி ரணிலுடன் இணைந்துகொள்ள விருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்பிரகாரம், ஹர்ஷ டி சில்வா, ஏரான் விக்ரமரத்ன மற்றும் கபீர் ஹாசீம் ஆகியோரே இணைந்துகொள்ளவுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வந்தார்கள்….. போனார்கள்…. வாழ்க்கையே போச்சு….!
(சாகரன்)
போத்துக்கீசர் கப்பல் கட்டி வந்தனர். வியாபாரம் என்றனர். ஒன்றாக இருந்த மக்களிடம் நஞ்சை விதைத்தனர்.
எம்மிடையே உள்ளே இருந்த (அரச) தீய சக்திகள் அவர்களுடன் இணைந்தனர் எமது வளங்களை சுரண்டி எடுத்துச் சென்றனர்.
வளம் இருப்பதை கேள்விப்பட்டு ஒல்லாந்தர் வந்தனர். முன்னவரை அடித்துக் கலைத்தனர் அதற்கு நாமும் உதவியாக இருந்தோம்… வந்தவன் சீதேவி என்று நம்பி…?