மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக விவசாயிகள் களமிறங்கல்!

பாஜக பிரிஜ் பூஷன் எம்பி., மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டல் செய்ததைத் தொடர்ந்து அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் போராடி வந்தனர்.

“மலையமாருதம்” ஓய்ந்து போனது!

(Nadarajah Kuruparan)


இப்போதெல்லாம் முகநூலை பார்ப்பதற்கு அச்சமாக இருக்கிறது. இலையுதிர் காலத்தில் எங்கும் இலைகள் உதிர்வது போல், உதிர்ந்து போகும் நண்பர்களின், உறவினர்களின், நன்கு அறிமுகமானவர்களின் முகங்கள் முகநூலை தினம்தோறும் ஆக்கிரமிக்கின்றன.

பேரிழப்பு!

நண்பன், தோழன், மனிதநேயன், அரசியல் சமூகசெயற்பாட்டாளன் திரு. லோறன்ஸின் இழப்பு ஆறுதல்கொள்ள முடியாதது!!

1975ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் சக மாணவனாக சந்தித்ததிலிருந்து 1997இல் கொழும்புக்கு மாற்றலாகி வந்ததுவரை இடையறாது உடன்பாடுகள், முரண்பாடுகளுடனான கருத்துப் பரிமாறல்களுடன், நட்புடன் பழகிவந்தவர் தோழர் லோறன்ஸ் அவர்கள்!

முன்பு ஒருநாள் செய்த வினை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

கறுப்பு ஜூலை நாற்பதாண்டுகளின் பின்னர் – 02:

தமிழ் மக்கள் மீதான இனவன்முறை, 1983இல் நடந்தேறியபோது அதை ஒரு தனித்த நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியாது. அது நீண்டகாலமாகத் தொடர்ந்துவந்த நெருக்கடிகளின் விளைவாக, திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்செயல் ஆகும். 

டிஜிட்டல் மயமாகிறது பொதுப் போக்குவரத்து

நாட்டின் பொதுப் போக்குவரத்து முறையை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று  போக்குவரத்து அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது அணுகுமுறையை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்

(என்.கே அஷோக்பரன்)

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு, தையிட்டி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி, மே மாத ஆரம்பத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சிறிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர். போராட்டம் ஆரம்பமான காலப் பகுதியானது, வெசாக் நிகழ்வுகள் இடம்பெற்ற காலப்பகுதியாகும். 

சீனாவின் கனவை இந்தியா தகர்த்துவிட்டதா?

இலங்கைக்குள் தங்களுடைய கால்களை நன்றாக ஊன்றிக்கொள்வதில், அண்டைய நாடான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடுமையான போட்டிகள் நிலவுகின்றன.

தொடர்ந்து சரிகிறது டொலர்

ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இலங்கை வர்த்தக வங்கிகளில் இன்றும் (29) குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை (22) ரூ. 298 ஆக இருந்த டொலரின் பெறுமதி வெள்ளிக்கிழமையளவில் (26) ரூ.292 ஆக சரிவடைந்தது. இன்று (29) டொலரின் பெறுமதியானது மீண்டும் ரூ. 280 ஆக குறைவடைந்துள்ளது.

டொலரின் தொடர் வீழ்ச்சி ஆபத்தானது

இலங்கை சர்வதேச சந்தையில் முனைப்புடன் ஈடுபடாததால் தான் டொலரின் பெறுமதி குறைவதற்கான காரணம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வேளாண்மைச் செய்கை பாரிய நெருக்கடியில்

வேளாண்மைச் செய்கை பாரிய நெருக்கடியைச் சந்தித்திருக்கிறது. உற்பத்திச் செலவு மிகைத்து விட்டது. சந்தையில் நெல்லின் விலை தளம்பிக் கொண்டே இருக்கிறது. 65.5 கிலோ நெல் மூடையொன்றின் விலை 4000.00 ரூபா அளவுக்கு வீழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் 6000.00 ரூபா என்றால்தான் ஓரளவு நிமிரலாம். ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. சாத்தியம் இல்லை என்றே சொல்லலாம்.