(தோழர் ஜேம்ஸ்)
ஈழத்தில் தற்போது அரங்கேறியுள்ள சிலை அரசியல் பிரபாகரனுககு அப்பால் இன்னொரு தலமை பற்றி பேச விளைந்துள்ளது. அதிகம் இது கவத்திற்கு வரவில்லை என்றாலும் இதற்கான ஆரம்ப புள்ளிகளை காண முடிகின்றது.
The Formula
இம்முறை தமிழகப் பயணத்தில் நான் பார்த்து மிகவும் அஞ்சிய விடயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அது வேறொன்றும் இல்லை எங்கு நோக்கிலும் உணவு உணவு உணவு. தமிழகத்தில் உணவு பெரும் வணிகம் ஆகிவிட்டது. எல்லோரும் எதையாவது தின்று கொண்டே இருக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
(எம்.எஸ்.எம். ஐயூப்)
நாட்டில் எது நடந்தாலும் அதனை தமது அரசியல் கண்ணோட்டத்தின் படி அல்லது தமது எதிரிக்கு எதிராக பாவிக்கும் நோக்குடன் வியாக்கியானம் செய்வதையே பலர் விரும்புகின்றனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் மூன்று மாகாண ஆளுநர்களை பதவி நீக்கம் செய்து அவர்களுக்கு பதிலாக வேறு மூன்று பேரை நியமித்த போதும் அதனையே அவதானிக்க முடிந்தது.
(புருஜோத்தமன் தங்கமயில்)
மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்கப்போகிறார் எனும் தகவல், அண்மைக்காலமாக அடிக்கடி பரவி வருகின்றது. கடந்த வாரத்தில், பதவி ஏற்பதற்காக அவர் தன்னுடைய வீட்டிலிருந்து, ஜனாதிபதி செயலகம் நோக்கி புறப்பட்டுவிட்டார் என்பது வரையில் வதந்தி பரவியது. இந்த வதந்தி பரவிக் கொண்டிருந்த போது, அவர் மாத்தறையில் ஒரு குடும்ப நிகழ்வில் பங்குபற்றிக் கொண்டிருந்தார். ஆனால், மஹிந்த மீண்டும் பிரதமராக பதவி ஏற்கப்போகிறார் என்ற தகவல்கள் அடிக்கடி வெளியாவதன் பின்னால், வதந்தியைப் பரப்புவர்களைக் காட்டிலும், மஹிந்த வாதிகளே அதிகம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படுவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினார். கடந்த சில வருடங்களாக நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பல வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும்அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும்,பல்வேறு அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினால் ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்தின்படி டொலரின் கொள்வனவு விலை 295.63 ரூபாயாக உள்ளது. அத்துடன், விற்பனை விலை 308.54 ரூபாயாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.