யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் யாழ்ப்பாண பொலிஸாரினால் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு இமானுவேல் ஆனோல்ட் சென்றபோதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Month: May 2023
மூன்று புதிய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம்
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் ஆகிய மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, வடமாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
கடலோர மீன்பிடிக்கு மரணம்: இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
இலங்கையின் வடகடலில் கடல் வெள்ளரி விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே வருகின்றன. யுத்தத்துக்குப் பின்னர் வடக்கு மீனவர்கள் பல்வேறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். பலமுறை எடுத்துகூறியும் ஆக்கப்பூர்வமான எந்தவிதமான நடவடிக்கைகளையும் இதுவரையிலும் எட்டப்படவில்லை என்று மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சீனி மற்றும் பால்மா விலை குறைப்பு
இலங்கை சதொச சீனி மற்றும் பால்மாவின் விலையைக் குறைத்துள்ளதாகவும் புதிய விலைகள் இன்றுமுதல் (15) அமுலுக்கு வருவதாகவும் லங்கா சதொச தெரிவித்துள்ளது. 400 கிராம் பால்மா பொதியின் விலை 60 ரூபாவினாலும் ஒரு கிலோகிராம் சீனியின் விலை ரூ. 6 இனாலும் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப 400 கிராம் பால்மா பொதியின் புதிய விலை ரூ.1,080 உம் ஒரு கிலோகிராம் சீனியின் குறைக்கப்பட்ட புதிய விலை ரூ.243 எனவும் சதொச அறிவித்துள்ளது.
காலாவதியான (காலம்) கஞ்சி .
இலங்கை வாழ்க்கைச் செலவு
மக்கள் வங்கியில் பரிணத வைப்பில் ரூபா 550,000/- வைப்பிட்டால் 15.5% வட்டி =
550,000 ×15.5÷100 = ரூபா85,250/-
வருடத்துக்கு கிடைக்கும். எனவே
மாதத்துக்கு 85250÷12=ரூபா7104.17கிடைக்கும். இதில் பிடிப்புவரி( WHT) 5%,
நீக்கி கிடைப்பது 7104.17×95÷100 = ரூபா6748.96…..
இன்றைய வாழ்க்கை செலவு உயர்வில் 5 1/2இலட்சம் நிலையான வைப்பிலிருந்து கிடைக்கும் வட்டி ரூபா 6749/- மாதந்தம்
மின்கட்டண,தொலைபேசிக் கட்டணங்கள் செலுத்த போதாது.
2023ஏப்ரல் மாத கட்டணங்கள்
பின்வருமாறு
Dialog 613.86 + Mobitel 541.59 +
CEB 3768.21 + SLT 2026.42 = ரூபா
6920.08
மாதாந்த ஓய்வூதியம் ரூபா 41,500/- பெறுபவருக்கு ஆறிலொரு பங்கு மின்சார+ தொலைபேசி+Internet செலவாகும்.
இந்து தர்மத்தின் படி1/6 ஐ அரசனுக்கும், 1/6 கடவுளுக்கும், 2/3 ஐ நீயும் எடுத்துக் கொள்ளலாம் என்ற தர்மம் பின்பற்றப்பட்டது. வேறு மதத்தவர்
1/10 ஐ இறைவனுக்கு செலுத்துவர்.
ஆனால் நீர் வரி,தொலைக்காட்சி, வானொலி, எரிபொருள் (வாகனத்துக்கும்,சமையலுக்கும்)
நீக்கி தொடர்பாடலுக்கும் மின் ஒளிக்கும் 1/6 க்கு மேல் அமைவது நாட்டு நலனுக்குகந்தது அல்ல். எனவே
மின் கட்டண அறவீடு மறுசீரமைத்தல் காலத்தின்
கட்டாயமாக அமுல் நடத்தப்படல்
அவசியமாகும். மின் கட்டண வழங்கல் செலவைவிட, மின்கட்டண அறவீடு மிக அதிகம்.
இதை ஜனாதிபதி கவனத்தில்
கொள்ளாதுவிட்டால் அவரது சுபீட்சமான அரசியல் எதிர் காலத்தை பாதிக்கலாம்?.
குறிப்பு:- மாதாந்த வட்டி வருட வீதம் 14.5% மாக மக்கள் வங்கியில் குறிப்பிடப்பட்ட போதும் போட்டி சந்தை நிலமையை கருத்தில் கொண்டு
1% அதிகரித்து 15.5%த்தில் கணிப்பு மேற்கொள்ளப் பெற்றது.
(Kathir Pillai)
வியக்கவைக்கும் வாழைஇலை..!!!
நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை. ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும். மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே. வாழை குலை எடுக்கலாம், வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு.
பாலேந்திராவின் நூல் அறிமுக நிகழ்வு
அழகான வரிகள் பாடலும் காட்சியமைப்பும் சிறப்பு முரளி மீனாவின் நடிப்பும் அருமை
கண்டி, சமூக அபிவிருத்தி நிறுவகம் மலையக மக்களின் 200 வருடகால வரலாற்றை நினைவுக்கூறும் வகையில், இம்மக்களது வரலாறு மற்றும் நாட்டின் அபிவிருத்திக்கு வழங்கிய பங்களிப்பினை வெளிக்காட்டும் வகையில் எதிர்வரும் 2023 மே மாதம் 19, 20, 21 ஆம் திகதிகளில் நுவரெலியா சினிசிட்டா மண்டபம் மற்றும் ரேஸ்கோஸ் மைதானத்தில் கண்காட்சி மற்றும் ஆய்வரங்கு உட்பட பல விசேட நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.
தமிழ் மன்னன் எல்லாளன் பற்றிய வீர வரலாறு
எல்லாளன் கி.மு 205 இல் இருந்து கி.மு 161 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன். இந்தத் தகவலைச் சிங்கள வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது. இவனது ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாகப் பொதுவாக சிங்களச் சார்பான ஆவணமாக பார்க்கப்படும் மாகவம்சம் குறிப்பிடுகின்றது.