ரஷ்யாவில் வாக்னர் குழுவின் நடவடிக்கையால் ரஷ்யாவில் உள்நாட்டுப் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கே ரஷ்யாவில் இப்போது என்ன நிலைமை இருக்கிறது என்பது குறித்து ரஷ்யா வாழ் தமிழர் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
Month: June 2023
கொழும்பு மக்களுக்கு உயிராபத்து; வீடுகளை இடிக்க நடவடிக்கை
மன்னார் வளைகுடா கடலில் அரிய வகை கடல் வாழ் உயிரினம்
அக்கறைப்பற்றுக்கான இரவு நேர பஸ் சேவை ஆரம்பம்
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து மாலை 3.00 மணிக்கு மட்டக்களப்பு நோக்கிப் புறப்படும் புளத்திசி கடுகதி புகையிரத்தில் பயணிக்கும் பயணிகளின் நன்மை கருதி மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கான இரவு நேர பஸ் சேவை (24) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திகாந்தன் போக்குவரத்து அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு டிப்போவினால் இச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியினருக்கு அதிரடி கட்டுப்பாடு
இந்துத்துவத்தின் அகண்ட பாரத பொம்மலாட்டம்; நூல் பிடிக்கும் புலம்பெயர் சாகச பொம்மைகள்
(புதிய திசைகள்)
இந்திய அரசு ஈழத்தமிழர்களின் தேசியக் கோரிக்கைகள் தொடர்பாக என்ன வகையில் எல்லாம் நடந்து வருகிறது என்பது தொடர்பாக புதிய வியாக்கியானங்கள் தமிழ் மக்களுக்கு அவசியப் படும் நிலை இன்றில்லை. இந்திய அரசு மட்டுமல்ல உலகில் இருக்கும் வலிமை வாய்ந்த அரசுகள் அனைத்தும் தமது தேசத்தின் நலன் சார்ந்துதான் வெளிவிவாகார விடயங்களை அணுக வல்லன என்பது சர்வதேச அரசியலின் முதல் அரிச்சுவடி.
டைட்டன் கப்பலில் ஐந்து பயணிகள் பலி
டைட்டானிக் கப்பலை பார்க்கச் சென்று காணாமல் போனதாக கூறப்பட்ட, டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 5 பயணிகளும் உயிரிழந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. டைட்டானிக் கப்பலில் இருந்து சுமார் 1600 அடி பிரதேசத்தில் கப்பலின் ஐந்து பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதை அமெரிக்க கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது. டைட்டன் நீர்மூழ்கி கப்பல், கடலின் மேற்பரப்புடனான தொடர்பை இழந்த சிறிது நேரத்திலேயே அமெரிக்க கடற்படை ஒரு வெடிப்புடன் ஒத்துப்போகும் சத்தத்தை கண்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைட்டானிக்
டைட்டானிக் விபத்து நடந்து ஒரு நூற்றாண்டு கடந்தும் இன்னும் அது ஒரு பேசுபொருளாகவே இருக்கும் நிலையில் டைட்டானிக் ship wreck இனை தனியார் நீர்மூழ்கி உல்லாசப் பிரயாண சேவையான Oceangate Titan சப்மரைனில் பார்க்க சென்ற ஐந்து செல்வக் கோமான்கள் மற்றும் அதை இயக்கிய பைலட் விபத்தில் சிக்கி இருக்கிறார்கள். இவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் உலகமே அங்கலாய்த்து கொண்டிருக்கிறது.
ஐக்கிய இராச்சியத்தின் பிரஜைகளான பில்லியனர் ஹமிஸ் ஹார்டிங் இவர் டுபாயை மையமாகக் வைத்து விமானங்கள் வாங்கி அதை லீஸிங் கொடுக்கும் தொழிலை செய்பவர்.
அடிவார முகாம் வரை ஏறினார் 5½ வயது சிறுமி
எவரெஸ்டின் அடிவார முகாம்தானே என்று சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம். இது கடல் மட்டத்தில் இருந்து 17 ஆயிரத்து 598 அடி உயரத்தில் இருக்கிறது. பயிற்சி பெற்ற மலையேற்ற வீரர்களே இதை எட்டுவதற்கு ஏக சிரமப்படுவார்கள். ஆனால் 5½ வயதே ஆகும் பிரிஷா, இந்த உயரத்தை தொட்டு, பிரமிப்பூட்டி இருக்கிறார்.
வடக்கையும் தெற்கையும் இணைக்கும் அடக்குமுறை
எம்.எஸ்.எம் ஐயூப்
வடக்கு, கிழக்கு வாழ் மக்கள், தமது சமூக அரசியல் உரிமைகளை அடைவதற்காக கடந்த நான்கு தசாப்தங்களாக, எவ்வளவு அடக்குமுறைகளை எதிர்நோக்கி இருப்பார்கள் என்பதை, இப்போதுதான் தெற்கில் வாழும் மக்கள் உணர ஆரம்பித்துள்ளார்கள். தம் மீதும் அரசாங்கம் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கும் நிலையிலேயே, அவர்கள் இந்த உணர்வைப் பெற்று வருகிறார்கள்.