குருந்தி விகாரை காணி விவகாரம்; வெளியான அறிவிப்பு

ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 08ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில், குருந்தி விகாரைக்குச் சொந்தமான அரச காணிகள் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கமைய, தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி எல்லாவல மேதானந்த தேரர் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தனது நிலைப்பாட்டை அறிவித்திருந்தார். 

இ.போ.ச பஸ்களில் இனி நடத்துனர் இல்லை

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் சேவையில் ஈடுபடுத்தப்படும் பஸ்களில், நடத்துனர் இன்றி சேவைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இருதய நோய் அதிகரிப்பு; இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

காற்று மாசுபாடு உலகின் ஏனைய பகுதிகளைப் போன்று இலங்கையிலும் இதய நோய் அபாயத்தை அதிகரித்துள்ளதாக உயர் இருதயநோய் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பந்தரை எரிச்சலூட்டிய ரணில்

(புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,“…எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், தொடர்ந்தும் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவதால் எந்தப் பயனும் இல்லை..” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்திருக்கின்றார். 

தோழர் எஸ்.டி.பண்டாரநாயக்கா :

1917 – 2014
இலங்கை இனப்பிரச்சினையின் நெருக்கடியான காலத்தில் அன்றைய பிரதமரான S.W.R.D. பண்டாரநாயக்க, தமிழர் தலைவர் என்று அழைக்கப்பட்ட செல்வநாயகத்துடன் சுமுகமான ஒரு தீர்வுக்கு இணங்கிய வேளையில் அதைக் குழப்பும் வகையில் எதிர் கட்சியாக இருந்த வலதுசாரி ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய நபராக இருந்த ஜெ.ஆர். ஜெயவர்த்தனா சிங்களவர்களை உசுப்பும் வண்ணம், அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து கண்டிக்கு நடந்து செல்லும் யாத்திரை ஒன்றை அறிவித்தார்.

அன்றைய கம்யூனிஸ்ட் கடசியின் உறுப்பினராக இருந்த தோழர் எஸ்.டி .பண்டாரநாயக்கா அந்த யாத்திரையை இடைமறித்து அந்தக் கும்பலை அடித்து விரட்டினார்.

தோழர் சண்முகதாசன் தலைமையில் இயங்கிய அன்றைய சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி, தமிழர்கள் மத்தியில் நிலவிய சாதிக் கொடுமைகளுக்கு எதிராக, கட்சியின் துணை அமைப்பான தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் உதவியுடன் நடாத்திய ஆலய நுழைவு , தேநீர்கடைகளில் சமஉரிமை போன்ற போராட்டங்களில் தமிழரசுக் கட்சியும் “தந்தை” செல்வாவும் அவரது சகாக்களும் எவ்விதம் சாதிவெறியுடன் இயங்கினார்கள் என்பதையும், தமிழ் எம்.பி களின் சாதிய வன்மத்தையும் போராட்ட களத்தில் நேரே கண்ட தோழர் எஸ்.டி .பண்டாரநாயக்கா இலங்கை பாராளுமன்றத்தில் இவர்களை அம்பலப்படுத்தி உரையாற்றினார்.

படத்தில்

  1. தோழர். எஸ்.டி .பண்டாரநாயக்கா
  2. சேனநாயக்கா – ஜே ஆர் ஜெயவர்த்தன கண்டி யாத்திரை
  3. தோழர் சண்முகதாசன் – மற்றும் அவரது சகபாடிகள் [ சுன்னாகம்]

சமூக அசைவியக்கத்தில் மதமும் முரண்பாடுகளும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

கறுப்பு ஜூலை நாற்பதாண்டுகளின் பின்னர் – 04:

இலங்கை அரசியலில் மதத்துக்கு முக்கிய பங்குண்டு. அரசியலமைப்பின் வழி, பௌத்தத்துக்கு பிரதான இடம் வழங்கப்படுவதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே, மதம் முக்கியமான ஒன்றாகிவிட்டது. 

யாழ். பல்கலையில் மோதல்; 28 மாண்வர்களின் தடை நீக்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் ஏற்பட்ட குழு மோதல் சம்பவத்தின் அடிப்படையில் உள் நுழைவுத் தடை விதிக்கப்பட்டிருந்த மாணவர்களில் 28 பேர் மீதான தடை பூர்வாங்க விசாரணைகளின் முடிவில் நீக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடையாளப்படுத்தப்பட்ட மூன்று மாணவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ரூபாயில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை மற்றும் விற்பனை விலை தொடர்பான தகவல்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்றைய (16) கொள்முதல் விலை 300.51 ரூபாயாக பதிவாகியுள்ளது. விற்பனை விலை 319.66 ரூபாயாகும். இதேவேளை, நேற்று (15) டொலரின் கொள்வனவு விலை 311.60 ரூபாயாகவும் விற்பனை விலை 328.92 ரூபாயாகவும் பதிவாகி இருந்தது. அதன்படி, ரூபாயின் மதிப்பு இன்று சற்று உயர்வடைந்துள்ளது.

மீண்டும் டொலர் 300 ஐத் தாண்டியது

இலங்கையின் சில வர்த்தக வங்கிகளில் ஐக்கிய அமெரிக்க டொலரின் பெறுமதி மீண்டும் இன்று(14) ரூ. 300 ஐத் தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று புதன்கிழமை (14) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் இலங்கை ரூபாவுக்கு எதிரான அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை ரூபா 318.9974 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 303.1925 ஆகவும் பதிவாகியுள்ளது.

செந்தில் பாலாஜிக்கு 28 வரை சிறை

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜியை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.