தொடர்ந்து சரிகிறது ரூபாய்

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினமும் குறைந்துள்ளது. அமெரிக்க டொலரின் இன்றைய கொள்வனவு விலை ரூ. 294 ஆகவும் விற்பனை விலை ரூ. 309 ஆகவும் பதிவாகியுள்ளது. டொலரின் நேற்றைய கொள்வனவு விலை ரூ. 290 மற்றும் விற்பனை விலை ரூ. 303.73 ஆகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரூபாய் சரிந்தது

ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதற்கேற்ப டொலரின் இன்றைய கொள்வனவு விலை ரூ.290 மற்றும் விற்பனை விலை ரூ. 303.73 ஆகும்.  

முதலாம் திகதி முதல் யாழ்ப்பாணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

எதிா்வரும் ஜுலை முதலாம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில் தரம் ஒன்பதிற்குட்பட்ட மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் தனியார் வகுப்புக்களை நடாத்துவதை நிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

கலைவாதி கலீல் மறைவுக்கு அஞ்சலி!

(Maniam Shanmugam)

முன்னாள் ஆசிரியரும், பன்முக ஆளுமை கொண்டவருமான தோழர் கலைவாதி கலீல் காலமான செய்தி துயரமானது, அதிர்ச்சிகரமானது.
சமூகப் பிரக்ஞை கொண்ட கலீல் எழுத்துலகில் தொடாத துறையே கிடையாது எனலாம். வாழ்நாள் முழுவதும் தாம் வரித்துக்கொண்ட முற்போக்கு சிந்தனையின் அடிப்படையில் அயராது செயற்பட்ட வண்ணமே இருந்தார். அவருக்கு எதிரிகள் என்று யாரும் கிடையாது. நாடு முழுவதும் எல்லா இனங்களிலும், எல்லாத் தரத்திலும் நண்பர்களே மிகுந்திருந்தார்கள்.

புத்தமதத்துக்கு இந்தியா முக்கியத்துவம் அளிப்பது ஏன்?

இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உதித்த  புத்த நெறியின் வரலாறானது, கி.மு 5ஆம் நூற்றாண்டில் ஆரம்பமாகின்றது. பண்டைய மகத நாட்டில் (இப்போது பீகார், இந்தியா), புத்தரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு பௌத்தம் உதித்தது.

நினைவாஞ்சலி: கலைவாதி கலீல்

(Sarawanan Komathi Nadarasa)

நம் மதிப்புக்குரிய மூத்த எழுத்தாளரும் கலைஞருமான கலைவாதி கலீல் அவர்கள் காலமான செய்தி அதிர்ச்சியையும் துயரத்தையும் தருகிறது.

ஆடைத் தொழிற்றுறையை கட்டிக்காப்பது அவசியமாகும்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில், உயர்தரம் கற்பதற்கு தேவையான பெறுபேறுகள் கிடைக்காவிடின், பெரும்பாலானவர்களின் முதல் தெரிவு ஆடை தொழிற்றுறை ஆகத்தான் இருக்கும். சிலர், பரீட்சை நிறைவடைந்த மறுநாளே, ஆடைத் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றுவிடுவர்.

பொன்சேகா இராஜினாமா

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தேசிய பாதுகாப்புக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து நீங்கிவிட்டார். இது தொடர்பில் பாராளுமன்றத்துக்கு இன்று (09) அறிவித்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, அந்த வெற்றிடத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்றும் அறிவித்தார்.

தவறான முடிவுகளால் தள்ளாடும் மக்களும் திவாலாகும் நாடும்

கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்தவர்களினால் தொடர்ச்சியான மேற்கொள்ளப்பட்ட தவறான முடிவுகளால் நாடு திவாலான நிலைக்கு தள்ளப்பட்டது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் இவ்வாறான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தமையினால், அவ்வாறான திறமை மற்றும் போதியளவு அனுபவமற்றவர்களை தெரிவு செய்த மக்களுக்கு நல்ல படிப்பினையை ஏற்படுத்தியிருந்தது.

இலங்கையில் மன்டரின்

நாட்டின் பல பாகங்களிலும் தோடம்பழப் பயிர்ச்செய்கை நடைபெற்றாலும் கண்டி, நுவரெலியா மற்றும் பது மாவட்டங்களின் கீழ் பகுதிகளில் மன்டரின் பழப்பயிர்ச்செய்கைக்காக நிதி ஒதுக்க கமத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.