சென்னை- இலங்கை இடையே முதல் பயணக் கப்பல் சேவை ஆரம்பம்

சென்னைக்கும் இலங்கைக்கும் இடையிலான முதல் சர்வதேச பயணக் கப்பலான “எம்வி எம்பிரஸ்” மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் திங்கள்கிழமை முறைப்படி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

சொகுசு கப்பல்

இந்தியாவின் முதல் சர்வதேச பயணிகள் கப்பல் சென்னையில் இருந்து இலங்கைக்கு அனுப்பட்டது. இந்த சொகுசு கப்பலில் நீச்சல் குளங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பல சிறப்பு வசதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

A9 வீதியில் பாரிய விபத்து ஏழு பேர் ​ காயம்

ஏ_9 வீதியில் மன்னகுளம் பகுதியில் இடம்பெற்ற  விபத்து ஒன்றில்  ஏழு பேர் காயமடைந்துள்ளனர் குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்

யாழ். பல்கலையில் மோதல்: 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில்  31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஒடிசா ரயில் விபத்துக்கான மூலக் காரணம் தெரிந்தது

ஒடிசாவில் ஜூன் 2ஆம் திகதி நடந்த ரயில்கள் விபத்திற்கான மூலக் காரணம் என்னவென்பது தெரியவந்துள்ளது என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ரயில் விபத்துப் பகுதியில் நடக்கும் சீரமைப்புப் பணிகளை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இன்று (ஞாயிறு) காலை நேரில் ஆய்வு செய்தார்.

அதிக மின்கட்டணம் செலுத்தும் நாடுகளில் இடம்பிடித்த இலங்கை

ஆசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. இலங்கையில் அதிகரித்துள்ள மின்கட்டணத்தினால் பெரும்பாலான மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் சில மின்சார பாவனையாளர்கள் தமது மாதாந்த மின்கட்டணம் கட்டுக்கடங்காத அளவிற்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இதேவேளை, ஜூன் மாதம் மின் கட்டணத்தில் மாற்றம் வரும் என எரி சக்தி அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு மக்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு

18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வரி தொடர்பில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் கோப்பு ஒன்றை திறப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கு ஏற்ப 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவரும் அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் கோப்பொன்றை திறக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்திலிருந்து தினமும் விமான சேவை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாரத்தின் ஏழு நாட்களும் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டதாக துறைமுகங்கள், கற்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். 

ஒடிசா விபத்தில் 207 பேர் பலி; 900 பேர் படுகாயம்

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கியது. அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதியதில் இதுவரை 207 பயணிகள் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ தாண்டியது