சி.சுப்ரமணியம் என்பது முழுப் பெயர்

(By Kavitha Bharathy )

திரைப்படக் கலைஞர் ராஜேஷ்
என் நெருங்கிய நண்பர்.
இதுவரை ஊடக வெளிச்சத்துக்கு வராத சுவாரசியமான தமிழ்நாட்டு ஆளுமை யாரேனும் இருந்தால் அவரைப் பற்றிய ஒரு கட்டுரை வேண்டும் என்று ஒரு பிரபல வார இதழ் ராஜேஷிடம் கேட்டு இருந்தது…
” உங்ளுக்கு அது போன்ற யாரையேனும் தெரிந்தால் சொல்லுங்கள் பாரதி. போய் பார்க்கலாம்” என்றார் ராஜேஷ்.

யாழ் பல்கலைக்கழக உபவேந்தர், விரிவுரையாளர்களின் கல்வி அறிவு மோசடிகள்

(By Dr. முத்துகிருஷ்ணா சர்வானந்தன்)

யாழ் பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களின்(academic staff) கல்விசார் மற்றும் அறிவுசார் மோசடிகளை ( (academic and intellectual frauds)  அம்பலப்படுத்தும் பகிரங்கத் தொடரின்  முதலாவது கட்டுரை இது.

தோழர் சாருமஜூம்தார் நினைவு (ஜூலை – 28 ) நாள்!

திருத்தல் வாதம் ஒழித்திட,
உலகின் ஒளி தோழர் மாவோவை உயர்த்திய அருமைத் தோழர்
சாருமஜும்தார்
நினைவு நாள் ( ஜூலை – 28 ) உயர்த்துவோம்!
உலகின் ஒளி தோழர்
மாவோ அவர்களின்
சிந்தனைகளை இந்திய மண்ணில் விதைத்த பெருமை, இங்கு தோன்றிய
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்
இந்தியக் கம்யூனிஸ்ட்
கட்சியையே .( CPIML ) சாரும்.

நைஜர் நாட்டில் இராணுவ ஆட்சி

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜர் நாட்டில் இராணுவம் திடீரென ஆட்சிக் கவிழ்ப்பு புரட்சியில் இறங்கியது. அந்நாட்டு அதிபர் முகமது பாசும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டதாகவும் நைஜர் இராணுவம் பிரகடனம் செய்துள்ளது. இந்த ராணுவ புரட்சிக்கு ஐநா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 நைஜர் நாட்டில் இராணுவத்தினர் திடீரென புரட்சியில் ஈடுபட்டனர். ஜனாதிபதி முகமது பாசுமை அவரது பாதுகாவலர்களே சிறைபிடித்து வைத்துவிட்டதாகவும் அந்நாட்டு டிவியில் அறிவித்திருக்கின்றனர். இதனையடுத்து தலைநகர் நியாமேவில் பெருந்திரளாக மக்கள் ஒன்று திரண்டனர்.

மக்கள் தொகை வீழ்ச்சி

ஜப்பானில் வரலாறு காணாத அளவில் மக்கள் தொகை வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டோக்கியோ, உலகின் வல்லரசு நாடுகளின் ஒன்றாக ஜப்பான் உள்ளது. பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாகவும் ஜப்பான் திகழ்கிறது. இந்நிலையில் இங்கு மக்கள்தொகை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடா அறிவுறுத்தலின் பேரில் ஜப்பானில் மக்கள்தொகை கணக்கெடுப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது

இலங்கை தமிழர் பிரச்சினைகளை தீர்க்க மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க பிரதமர் மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அரசியலாளரும், வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கருத்து கூறியுள்ளார். காமராஜரின் ஸ்தாபனக் காங்கிரஸ், திமுக, மதிமுக ஆகிய கட்சிகளிலும் முக்கிய பங்கு வகித்த இவர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் தெரிவித்துள்ளார்.

மிகவும் வெப்பமான மாதம் ஜூலை

உலகிலேயே அதிக வெப்பமான மாதமாக ஜூலை நிச்சயம் மாறும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு இலட்சத்து இருபதாயிரம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வெப்பமான மாதமாக இது இருக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

வடக்கில் பூரண ஹர்த்தால்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதி கோரியும், சர்வதேசத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் இன்று (28) வெள்ளிக்கிழமை வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் வடக்கில் யாழ் மாவட்டத்திலும்  முழு அடைப்புப் போராட்டத்திற்கு யாழ்ப்பாணம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கம், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கமும், யாழ்ப்பாண வணிக கழகம், தனியார் பேரூந்து நிலைய உரிமையாளர்கள் சங்கம், முச்சக்கரவண்டிகள் சாரதிகள் சங்கம், வியாபார ஸ்தாபனங்கள், அங்காடி கடைத்தொகுதிகள் ஆகிய பூரண ஹர்த்தலுக்கு ஆதரவு செலுத்தியுள்ளன.

100ஆவது தடவையாக இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணி

ஜேர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் 100ஆவது தடவையாக இலங்கைக்கு வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார். ஜோர்ஜ் சீலன் என்ற 72 வயது நபரை  வரவேற்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ருஹுனு சுற்றுலா பணியகத்தில் இடம்பெற்றது. சிங்கள மொழியை சரளமாகப் பேசக் கூடிய குறித்த நபர் 1971 ஆம் ஆண்டு 19 வயதில்  முதன்முறையாக இலங்கைக்கு வந்துள்ளார். அதன் பிறகு ஜோர்ஜ் சீலன் ஆண்டுதோறும் பல தடவைகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இதேவேளை, நூறாவது தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்வதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறியுள்ளார்.

மயில்கள் பெருகி பயிரை அழித்து வருகின்றன

மயில்கள் பெருகி பயிரை அழித்து வருகின்றனவே. வனத்துறை என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது..?
கோவையில் நடந்த விவசாய விழிப்புணர்வு கூட்டத்தில். ஒரு பெண்மணி கேட்ட கேள்விக்கு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த அனுபவமுள்ள ஒரு அதிகாரி பதிலளித்தார்.