தீவக வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 09 வயதான மாணவியை பிளாஸ்ரிக் குழாயினால் 20 தடவைகள் தாக்கியதாக பாடசாலை அதிபருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.
Month: July 2023
IMF இன் 33 உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்றியுள்ளது
2023 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் சர்வதேச நாணய நிதிய (IMF) வேலைத்திட்டத்தின் கண்காணிக்கக்கூடிய 33 உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்றியுள்ளது, ஆனால் அவற்றில் எட்டு உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துள்ளதாக, வெரிட்டே ரிசர்ச் மூலம் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்நிலை (ஆன்லைன்) கருவியான “IMF கண்காணிப்பான்” தெரிவிக்கின்றது.
முல்லைத்தீவு, திருகோணமலை, வவுனியா: எல்லைக் கிராமங்களில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் சொல்வது என்ன?
ஊடக விரிவுரை ஒன்றுக்காக சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்ட , அனுராதபுரம் பதவியா, கிராமத்துக்குக் கடந்த யூன் 28, யூலை 08 ஆகிய திகதிகளில் இரண்டு தடவைகள் சென்று வந்தேன். அருகே பதவிசிறிபுர. வெலிஓயா கிராமங்கள் உள்ளிட்ட பல சிறிய கிராமங்கள் உண்டு. பதவிசிறிபுரவைத் தவிர ஏனைய கிராமங்கள் அனுராதபுரம் மாவட்ட நிர்வாகப் பிரிவில் அடங்கினாலும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான முல்லைத்தீவு. வவுனியா, மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்குரிய காணிகள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதாவது வடக்குக் கிழக்கு எல்லையை இணைக்கும் தமிழ்க் கிராமங்கள்தான் இவை.
ஜூலை 14, வரலாற்றில் இன்று
கார்ல் மார்க்ஸ் அறிவித்த “8 மணி நேர வேலைதிட்டம்” தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட தினம் இன்று 1889-ம் ஆண்டு 14-ம் நாள் பாஸ்டில் வீழ்ச்சியின் நூற்றாண்டு விழா பாரிஸில் நடந்தது. இதற்கான உலகெங்கிலுமிருந்து சோஷலிச இயக்க தலைவர்கள் ஒன்று கூடியிருந்தனர். 25 ஆண்டுகளுக்கு முன் அவர்களின் மாபெரும் ஆசான்களான மார்க்ஸும், எங்கெல்சும் உருவாக்கிய அகிலத்தை போன்ற ஒன்றை உருவாக்கவே அவர்கள் அங்கு கூடினர். பின்னர் அதுவே இரண்டாவது அகிலம் என்று அழைக்கப்பட்டது.
வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான்-3
புதிதாக முளைக்கும் மதுக்கடைகளும் நாட்டின் ‘குடி’களும்
தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களைக் குறிவைத்து, அடத்தாக திட்டங்களைத் திணிப்பதில் பெரும்பான்மை அரசாங்கம் கைதேர்ந்ததாகத் தன்னைக் காண்பித்து வருகின்றது. சனப்பரம்பலை சீர்குலைப்பதில் இருந்து, மக்களைப் பாதிக்கக்கூடிய திட்டங்கள் வரை, அடுக்கிக்கொண்டே போகலாம். அவ்வாறான பிரதேசங்களில், முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக, மக்கள் பெற்ற பயன்களைத் தேடினாலும் கிடைக்காது.
உயிரிழந்த யுவதிக்கு கொடுத்த மருந்து இதுதான்
அனைத்து பாடத்திட்டங்களும் புதுப்பிக்கப்படும்; கல்வி அமைச்சர்
அடுத்த ஆண்டுக்குள் அனைத்து பாடத்திட்டங்களையும் உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழியின் அடிப்படையில் பாடசாலை பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
உயர் பாதுகாப்பு வலயமாகும் புதிய களனி பாலம்
ஜப்பானிய அரசின் கடனுதவியுடன் புதிதாக கட்டப்பட்ட கோல்டன் கேட் கல்யாணி (Golden Gate Kalyani) பாலத்திற்கு போதைக்கு அடிமையானவர்களால் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பாலத்தில் சுமார் 28 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான செப்பு கம்பிகள் மற்றும் ஆணிகளை போதைக்கு அடிமையானவர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.