ஒவ்வொரு விடயத்தையும் புரிந்துகொள்ளுதல், பிரச்சினைகள் தொடர்பில் மனம் விட்டு கலந்துரையாடுதல், தங்களுக்குள்ளே விவாதித்துக் கொள்ளுதல் இன்றேல், ஆலோசனைகளை கேட்பதன் மூலமாக, மனப்பாரம் ஓரளவுக்கேனும் குறைந்துவிடும்; பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.
Month: July 2023
நினைவு தினம் அனுஷ்டிப்பு
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த விசேட ரயில்
யாழ் செல்ல முன்பதிவுகளை செய்யலாம்
யுத்தத்தின் போது இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றம்
அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்,1987 ஆம் ஆண்டு உச்ச யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கனகர் கிராமத்தில் உள்ள 500 ஏக்கர் நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட, போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான புனர்வாழ்வு வேலைத்திட்டத்தை அமைத்து கொடுப்பதற்கான நடவடிக்கையை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.
’அரகலய’ ஒரு வருட நிறைவில் கோட்டா என்ன செய்தார்?
கடந்த வருடம் ஜூலை 9 ஆம் திகதி மக்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் இரகசியமாக நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை, இவ்வருடம் அதே தினத்தில் தனது மனைவி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் காணமுடிந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
15 மில்லியன் ரூபாய் நட்டஈடு செலுத்தியுள்ள மைத்திரிபால
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், இதுவரை 15 மில்லியன் ரூபாயை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார் என உயர் நீதிமன்றில் பிரேரணை ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கை வந்தார்
காரைநகர் – ஊர்காவற்துறை: வழமைக்கு திரும்பிய கடற்பாதை சேவை
காரைநகர் – ஊர்காவற்துறை கடற்பாதையானது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கடலில் உடைந்து விழுந்தது. இதனால் காரைநகரில் இருந்து ஊர்காவற்துறைக்கும், ஊர்காவற்துறையில் இருந்து காரைநகருக்கும் பயணம் செய்யும் அரச உத்தியோகத்தர்கள், அன்றாட தொழிலாளர்கள், மாணவர்கள், நோயாளிகள், பொதுமக்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டனர்.. இந்நிலையில் குறித்த கடற்பாதையின் புனரமைப்பு பணிகள் கடந்த சனிக்கிழமை நிறைவுற்ற நிலையில் திங்கட்கிழமையில்(10) இருந்து வழமையான நேர அட்டவணையின்படி கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திரு. பாலச்சந்திரன் தெரிவித்தார்.
வவுனியாவில் 130 கடைகளுக்கு சிவப்பு அறிவித்தல்
வவுனியா நகரசபையினால் நிலவாடகை செலுத்தாத 130 வர்த்தக நிலையங்களிற்கு சிவப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது. வவுனியா நகர சபையின் கீழ் 447 கடைகள் காணப்படுகின்றன. இவற்றில் கடந்த 2022ம் ஆண்டு தொடக்கம் பல வர்த்தக நிலையங்கள் நில வாடகை செலுத்தாத நிலையில் நகரசபையினால் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.