ஸ்ரீலங்கன் விமான சேவையை உடனடியாக மறுசீரமைக்காவிட்டால், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 6,000 பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சகம் கூறுகிறது. சர்வதேச நிதி நிபுணர்களின் உதவியுடன் ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைக்க அரசாங்கம் தற்போது திட்டமிட்டுள்ளது. 51% பங்குகளை அரசாங்கத்தின் கீழ் வைத்து 49% பங்குகளை வேறொரு முதலீட்டாளருக்கு வழங்குவதன் மூலம் ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
Month: July 2023
இலங்கையில் மீண்டும் பூமியதிர்ச்சி; அதிர்ச்சியில் மக்கள்
இலங்கையின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து 1,200 கிலோமீற்றர் தொலைவில் ஆழ்கடலில் பூமியதிர்ச்சி ஒன்று பதிவாகி உள்ளது. 5.8 ரிக்டர் அளவில் இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த பூமியதிர்ச்சியால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த பூமியதிர்ச்சி கொழும்பு, பத்தரமுல்ல, அக்குரஸ்ஸ மற்றும் காலி போன்ற பகுதிகளில் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பற்றிய உண்மையை உடைத்த வுஹான் ஆராய்ச்சியாளர்
சீனா, வேண்டுமென்றே கொரோனாவை மக்களின் மீது ஆயுதமாக பயன்படுத்தியதாக கூறிய வுஹான் ஆராய்ச்சியாளர். ஒரு நேர்காணலில் சீனாவின் கொரோனா வைரஸ் பரவப்பட்டதாகக் கூறப்படும் வுஹானைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளர் சாவோ ஷாவோ, கூறும்போது கொரோனா வைரஸ் குறித்த திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்டார். சாவோ ஷாவோ, வுஹானின் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியில் ஆராய்ச்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.