தொழில் வாய்ப்புக்காக வௌிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கை பணியாளர்களுக்கு வீடுகளை அமைத்து கொடுக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை இணைந்து ஆரம்பித்துள்ளன.
Month: August 2023
கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் மாற்றம்
கிழக்கிலும் தொழிலற்றோர் சதவீதம் அதிகரிக்கிறது
கிளிநொச்சியில் 106 வன்புணர்வு
1 பில். டொலர்களை தாண்டியது வருமானம்
2023ஆம் ஆண்டில் இலங்கையின் சுற்றுலா வருமானம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் காட்டுகின்ற அதேவேளை, ஓகஸ்ட் மாதத்தின் முதல் 10 நாட்களில் 51,594 சுற்றுலாப் பயணிகள் வருகைதந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழர்கள் மத்தியில் சாதிக் கட்டமைப்பு
யாழ்ப்பாணத்தில் மலையாளிகளின் குடியேற்றம் நடந்தது என போத்துகேசரின் தோம்புகளின் அடிப்படையில் நிறுவ முற்படுகிறார் இந்த கட்டுரையாளர்…
மலையாளத்திலுள்ள முக்கிய சாதிகள் இருபத்தேளுள் பதினான்கு சாதிகள் யாழ்ப்பாணத்தில் குடியேறியிருக்கின்றன என்பது போத்துக்கேயர் எழுதி வைத்த தோம்புகளால் அறியக் கிடக்கின்றது.
தீண்டாமைக்கு எதிரான போராட்டம்
1960 களில் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் யாழ்ப்பாணத்தில் உச்சமாக நடந்தது. அதில் ஆலயப் பிரவேசத்துக்கான போராட்டம் முக்கியமானது. அந்தப் போராட்டம் தென்மராட்சியிலுள்ள பன்றித்தலைச்சி அம்மன்கோவிலிலும் நடந்தது. அப்பொழுது செல்லக்கிளி என்ற இளம்பெண் ஒருவர் கோயிலுக்குள் நுழைய மறுப்புத் தெரிவித்தவர்கள் மீது கைக்குண்டை எறிந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
நினைவாஞ்சலி: மோகனின் மௌனமே…! பல மொழிகளாக…. கவிதைகளாக…. காட்சிகளாக…..
(தோழர் ஜேம்ஸ்)
சமூக அக்கறை.. இடையறாத தான் நம்பும் வழிமுறையிலான மக்களுக்கான விடுதலை… அதுசார்ந்த சித்தாந்தம்… இவற்றிற்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிரான விடப்பிடியான கருத்தாடல் அதனை அதிகம் நகைச்சுவையாக ஆதாரங்களுடன் வெளியிடுதல் என்பதாக நண்பர்கள் தோழர்களுடன் பயணித்த மோகன் இனி கதையுரையாட எம்முடன் இல்லை.
கத்தர்
பாகிஸ்தான்: பாராளுமன்றம் கலைப்பு: 90 நாட்களில் தேர்தல்
அரசியலில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருக்கும் நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. பாராளுமன்றத்தை கலைக்கும் பிரேரணையில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார். பாகிஸ்தான் பாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைய மூன்று நாட்கள் இருக்கும் நிலையில் முன்கூட்டியே கலைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆட்சியில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவருடைய ஆட்சி கவிழ்ந்தது.
அதன் பின்னர் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து இம்ரான்கான் மீது 100-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இம்ரான்கானின் எம்.பி. பதவி பறிபோனது. ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதைத்தொடர்ந்து இம்ரான்கான் உடனடியாக கைது செய்யப்பட்டு பஞ்சாப் மாகாணத்தின் அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் பாராளுமன்றம் இரவோடு இரவாகக் கலைக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரகடனத்தைப் பாகிஸ்தான் ஜனாதிபதி பிறப்பித்துள்ளார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் 90 நாட்களுக்குள் நடத்தப்பட உள்ளது. தற்போதைய நிலையின்படி இம்ரான் கான் போட்டியிட முடியாது என்பதால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.