நீதிபதி விலகல்; ஜனாதிபதி அதிரடி உத்தரவு

குருந்துமலை விவகாரம் உள்ளிட்ட முக்கியமான வழக்குகளை விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றன முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா, தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறி பதவியை இராஜினாமா செய்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியின்
செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு பணித்துள்ளார்.

நீதிபதி விவகாரம்; அதிரடி நடவடிக்கையில் தமிழ் தேசியக் கட்சிகள்

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக  தனது பதவியை இராஜனாமா செய்துள்ளதுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். 

மூளைசாலிகளின் வெளியேற்றம்: ஒக். 6 இல் விவாதம்

பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் வல்லுநர்கள் (மூளைசாலிகள்) நாட்டை விட்டு வெளியேறும் சமீபத்திய போக்கு குறித்து எதிர்வரும் ஒக்டோபர்  6ஆம் திகதி ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி பதவி விலகல்; ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கண்டனம்

மிக உன்னதமான நீதித்துறையில் தலைசிறந்த அஞ்சா நெஞ்சுரத்துடன் குருந்தூர் மலை சட்டவிரோத பௌத்த கட்டுமானம், உள்ளிட்ட விவகாரங்களில் யாருக்கும் அடிபணியாமல் தீர்ப்புக்களை வழங்கிய முல்லைத்தீவு நீதிபதி மாண்புமிகு சரவணராசா அவர்கள் அழுத்தங்களால் பதவி விலக நிர்ப்பந்திக்கபட்டு உயிர் அச்சுறுத்தல் காரணமாக  நாட்டை வெளியேறி உள்ளமை தமிழர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

வழுக்கி(கை)ஆறு- வரமும் வளமும்- பகுதி 1

இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள யாழ்க்குடாநாட்டிலே மூன்று ஆறுகள் தொடர்பாக அறிந்திருப்போம்.
அவை

  1. வழுக்கி(கை) ஆறு
  2. தொண்டைமான் ஆறு
  3. உப்பு ஆறு
    இதில் குறிப்பாக வழுக்கி ஆற்றின் வரலாற்றையும் யாழ்க்குடாநாட்டில் அதிலும் வலிகாமம் பகுதியின் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பாதுகாப்பதில் வழுக்கியாற்றின் வகிபாகம் தொடர்பாக முடிந்த அளவுக்கு இந்த கட்டுரைத்தொடர் மூலம் பேச முயல்கிறேன். இன்னும் சில தலைமுறைகளின் பின் வலிகாமம் பிரதேசத்தில் நீர்வளமும் நிலவளமும் தொடர்ந்து இருக்க வேண்டும் எனில் வழுக்கி ஆற்றின் வகிபாகத்தை சரியாக புரிந்து கொண்டு அதை பாதுகாத்து அரவணைப்பது மிக மிக முக்கியம்.
    ஏனெனில் அண்மைய வருடங்களின் அவதானிப்புகளில் வரலாற்று ரீதியாக இருந்த வழுக்கியாற்றின் முக்கியத்துவம் மங்கி மருகி, வெறுமனே மழைகாலத்தில் வெள்ளத்தை வெளியேற்றும் ஒரு “Drainage system” அதாவது ஒரு “வடிகால்” என்ற அளவிலேயே வழுக்கி ஆறு பார்க்கப்படுகிறது.
    அத்துடன் வழுக்கி ஆற்றுக்கு நீரைக்கொண்டுவந்த பல பாதைகள் அதாவது வெள்ள வாய்க்கால்கள் இன்று பல பிரதான வீதிகளாகி விட்டன. பாதி வழுக்கி ஆறு காணாமலே போய்விட்டது.
    இன்று பலர் நினைத்துக்கொண்டிருப்பது வழுக்கி ஆறு அம்பனைச் சந்தியில் ஆரம்பிக்கின்றது என்றே. வழுக்கி ஆற்றின் நீரேந்து பகுதிகளாக அல்லது வழுக்கி ஆற்றினால் பயன்பெற்றுவருவதாக கருதப்படும் பிரதேசத்தை குறிக்கும் வரைபடம் ஒன்றை பதிவேற்றி உள்ளேன். வலிகாமத்தின் மிகப்பெரிய ஒரு பரப்பளவை வழுக்கி ஆற்றுப் படுக்கை தன் வட்டத்துக்குள் கொண்டு வருகிறது. ஏராளமான வாய்க்கால்கள், சிறு குளங்கள் மூலமாக தண்ணீர் வழுக்கி ஆற்றில் இருந்திருக்கிறது.
    யாழ்க்குடாநாட்டின் குறிப்பாக வலிகாமத்தின் உயரமான பகுதிகளை குறிக்கும் contour map ஒன்றையும் பதிவேற்றி உள்ளேன். அதை கூர்ந்து அவதானித்தால் தெல்லிப்பழையின் வடமேற்காக மயிலிட்டி தெற்கு, வறுத்தலைவிழான் பகுதிகள் வலிகாமத்தின் மிக உயரமான பகுதிகளாக இருந்திருக்கின்றன. அந்தப்பகுதிகளில் இருந்து தாழ்வான ஏழாலை பகுதிகளை நோக்கி ஓடிய வெள்ளத்தை கட்டுப்படுத்த கட்டுவன் பகுதியில் ஒரு அணையை கட்டியிருக்கிறார்கள். அந்த அணை இன்று ஒரு பிரதான வீதியாகி தெல்லிப்பழழை-வறுத்தலைவிழான்- கட்டுவன் வீதியாகியிருக்கின்றது. “கட்டுவன்” என்ற பெயரே “கட்டு” “வான் கட்டு” என்பதில் இருந்து மருவி வந்ததாக கூறப்படுகிறது. குறித்த அணைக்கட்டு இந்த வீதியின் இன்றைய கிறிஸ்தவ சுடுகாடு இருக்கும் பகுதிக்கு அண்மித்ததாக இருந்ததாக கருதப்படுகிறது.
    அவ்வறு வழி மறிக்கப்பட்ட நீரின் ஒரு பகுதி மயிலிட்டி பக்கமாகவும் இன்னொரு பகுதி தெல்லிப்பழை பக்கமாகவும் ஓடியிருக்கின்றது. அவ்வாறு ஓடிய நீர் ஒன்று கரண்டை குளம், முல்லைக்குளம்/முள்ளான்குளம்( இந்த குளத்தை இன்னும் அடையாளப்படுத்த முடியவில்லை) ஊடக ஆனைக்குட்டி மதவடியில் KKS வீதியை கடக்க, வறுத்தலையின் ஒரு பகுதி மற்றும் வீமன்காமம் ஊடாக வந்த நீரும் தெல்லிப்பழையின் ஒரு பகுதிநீருமாக தெல்லிப்பழை அம்பனை வீதி அருகில் உள்ள வாய்க்கால் வழியாக அம்பனை வயலை அடைந்திருக்கிறது. அந்தப்பகுதியில் தற்போது 2 குளங்கள் காணப்பட்டாலும் மேலும் சில இருந்திருக்ககூடும். அதன் பின்னர் நீண்டு ஓடி பினாக்கை குளத்தை அடைந்த பிறகு இன்று நாம் எல்லோரும் பார்க்கும் நீர் நிறைந்த ஆறு கிட்டத்தட்ட ஆவணி மாதம் வரை நீரோடு காணப்படுகிறது.
    இந்த வழுக்கி யாற்று படுக்கை ஒவ்வொரு மழையின் போதும் நிலத்தடிக்கு நீரை அனுப்புவதில் பெரும் பங்கு ஆற்றி வருகிறது. அதை பேசுவதானால் எங்கள் யாழ் குடாநாட்டின் கீழ் இருக்கும் “Aquifer systen” என்ற நிலத்தடி நீர்த்தேக்கம் போன்ற அமைப்பை விளங்கப்படுத்த வேண்டும். இணைப்பில் யாழ்க்குடாநாட்டின் கீழ் உள்ள 4 பெரிய aquifers களை படத்தில் காட்டியுள்ளேன். எங்கள் அனைவருக்கும் குடிநீரும், விவசாயத்திற்கான நன்னீரும் கிடைப்பது அதில் இருந்து தான். அதிலும் குறிப்பாக “சுண்ணாகம் Aquifer” மிகப் பெரியது. அந்த aquifer இனை அதன் அடியில் உள்ள உப்பு நீர் மேலெழாமல் சுத்தமாக பேணுவது இந்த வழுக்கி ஆறும் அதை சூழ உள்ள குளங்களும் நீரேந்து பிரதேசங்களும் என்பது பலருக்கும் தெரியாது.
    தவிர மண்வளமாக இருக்ப்பதற்காக, அதில் நாம் இடும் கழிவுகளை கழுவி அகற்றுவதும் இந்த வழுக்கி ஆறும் அதை சூழ உள்ள குளங்களுமே. நம் பிரதேசத்தின் பல உயிரினங்களுக்கும் பறவைகளுக்கும் வருடம் முழுவதும் நீரை கொடுத்து உயிர்பல்வகைமையை காத்து அழகிய இயற்கை வனப்பை கொடுப்பதுவும் இந்த வழுக்கி ஆறும் அதன் சூழலுமே. உங்கள் கிணறுகளின் இன்று நீர் அள்ளக்கூடியவாறு கிடைப்பதுவும் இந்த வழுக்கியாறும் குளங்களும் கொடுத்த வரமே.
    ஏன் யாழ் குடாநாட்டில் கந்தரோடை பகுதியில் முதலாவதாக மனித நாகரீகத்தை வளர்த்ததும் இந்த வழுக்கியாற்றின் ஊடான படகுப் பயணங்களே!
    இவை ஒவ்வொன்று பற்றியும் நீண்டு எழுதலாம்!
    தொடர்ந்து பேசுவொம்!
    தொடரும்….
    திருநாவுக்கரசு தயந்தன்
    08.09.2023

கனடா அரசு எச்சரிக்கை

கனடா நாட்டில் கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் இந்தியா- கனடா நாடுகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு இடங்களில் வசித்து வரும் கனடா நாட்டை சேர்ந்தவர்களுக்கு  கனடா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் வசிக்கும் கனடா நாட்டினர் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு கனடா அரசு சமூகவலைதளம் மூலம் அறிவுறுத்தி இருக்கிறது.

விமானங்கள் பற்றாக்குறையால் விமானங்கள் தாமதம்

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததே இலங்கை விமானங்கள் தொடர்ச்சியாக தாமதமாகி வருவதற்கு முக்கிய காரணம் என விமான சேவையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டம்

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக பகுதியில் மீன் பிடித் தொழில் மேற்கொள்ளும் படகு உரிமையாளர்களால் தொழில் செய்வதில் ஏற்பட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரி எதிர்ப்பு போராட்டத்தில் வியாழக்கிழமை (28) துறைமுகம் முன்பாக ஈடுபட்டனர்.

பணவீக்கத்தின் வீழ்ச்சி…

பணவீக்கத்தின் வீழ்ச்சி; போற்றப்பட வேண்டிய மத்திய வங்கியின் தலைமைத்துவம்

இரட்டை இலக்கங்களில் காணப்பட்ட நாட்டின் பணவீக்க வீதத்தை, ஒற்றை இலக்கத்துக்கு கொண்டு வருவதில் இலங்கை மத்திய வங்கியால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியனவாக அமைந்துள்ளன.

சப்ரி ஏன் இழுத்து விடுகிறார்?

இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி ஏன் இலங்கையை இந்திய கனடா மோதலிற்குள் இழுக்கின்றார் என எமது சகோதர ஊடகமான டெய்லிமிரர் கேள்வி எழுப்பியுள்ளது.